Top 10 News Headlines: வாடிவாசல் ட்ராப்பா? வாட்ஸ்-அப்பில் புது அப்டேட், மெஸ்ஸி அணி படுதோல்வி - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today June 30: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

டெல்லியில் முகாமிட்டுள்ள அன்புமணி
பாமகவில் ராமதாஸ் உடன் மோதல் முற்றியுள்ள நிலையில் டெல்லியில் முகாமிட்டுள்ள அன்புமணி ராமதாஸ். டெல்லி சென்றுள்ள அன்புமணி ராமதாஸ் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தேர்தல் ஆணையம் செல்லவுள்ளதாக தகவல். பாமகவில் தனக்கே அதிகாரம் என்பதை நிரூபிக்க தேர்தல் ஆணையத்தை நாடுகிறார்.
வாடிவாசல் ட்ராப்பா?
தனது அடுத்தபடம் சிம்புவுடன் தான் என தெரிவித்துள்ளதோடு, “வாடிவாசல் திரைப்படத்தின் கதையை எழுதுவதில் தாமதம் ஆகிறது. அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியாகவும், நடிகர்கள், விலங்குகளின் பாதுகாப்புக் கருதியும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது என்பதால்தான், அடுத்த படம் குறித்து முடிவு செய்துவிட்டோம்” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நெகிழ்ச்சி
தஞ்சாவூரில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தை ஸ்தானத்தில் முன்னின்று தனது சொந்த செலவில் திருமணம் நடத்தி வைத்த பத்திரப் பதிவுத் துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழக்க, உதவி கேட்டு வந்த பாண்டிமீனாவுக்கு தஞ்சை ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இன்று திருமணத்தையும் நடத்தி வைத்து சீர்வரிசை செய்தது பலரையும் நெகிழ வைத்துள்ளது
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு
ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே இறுதிப் பயணிகள் அட்டவணையைத் தயாரிக்க ரயில்வே முடிவு. டிக்கெட் உறுதியாகாதவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை.
தற்போது 4 மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு பயணிகளின் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. மேலும், நிமிடத்திற்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை உருவாக்கும் திறன் கொண்ட புதிய முன்பதிவு அமைப்பை கொண்டு வரவும் திட்டம்.
அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட சதியா...?
உலகையே உலுக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் முரளிதர் மோஹுல் தெரிவிப்பு. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பிளாக் பாக்ஸ்-ல் இருந்து கிடைத்த ரெகார்டிங் அடிப்படையில், பல கோணத்தில் பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாக விளக்கம்.
கொல்கத்தா சட்ட கல்லூரி மாணவி பாலியல் வழக்கு
கொல்கத்தா: சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி மனோஜித் மிஷ்ரா மீது ஏற்கனவே பல பாலியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன, இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என காவல்துறை அதிகாரிகள் தகவல். 2017, 2019, 2020, 2022, 2024 ஆண்டுகளில் இதேபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன
பெங்களூரு: குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு
கை, கால்களை கட்டி சாக்கு மூட்டையில் போட்டு வீசிய கொடூரம். போலீசார் தீவிர விசாரணை.
35 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும், நள்ளிரவில் சடலத்தை வீசியிருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்குவிட் கேம் பேரணி
தென்கொரியா: சியோலில் SQUID GAME தொடரை கொண்டாடும் விதமாக மாபெரும் பேரணி நடைபெற்றது. 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் கோலாகலம். இத்தொடரில் நடித்த நடிகர்களும் இதில் பங்கேற்றனர். ஸ்குவிட் கேமின் மூன்றாவது சீசன் அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்-அப்பில் புது அப்டேட்
வாட்ஸ் அப்பிலேயே ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்பும் வகையில் புதிய வசதியை விரைவில் அறிமுகம் செய்ய மெட்டா திட்டம். முதலில் BETA வெர்ஷனுக்கு சோதனை முறையில் அறிமுகம். (வேறு செயலிகளில் ஸ்கேன் செய்யும் வேலையை இது குறைக்கிறது.
மெஸ்ஸி அணி படுதோல்வி
க்ளப் உலக கோப்பை கால்பந்து தொடரின் Round Of 16 சுற்றில் PSG அணியிடம் 4-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது மெஸ்ஸியின் இண்டர் மியாமி. க்ளப் உலக கோப்பையின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அமெரிக்க அணி என்ற பெருமையுடன், தொடரில் இருந்து வெளியேறியது.





















