Top 10 News Headlines: தமிழகம் வரும் அமித் ஷா, ரூ.1 லட்சத்தை நோக்கி, துரந்தர் படத்திற்கு தடை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Dec 12th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

தமிழகம் வரும் அமித் ஷா
வரும் டிச.15ம் தேதி தமிழ்நாடு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சென்னை, வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், NDA கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார் என தகவல்.
ரூ.1 லட்சத்தை நோக்கி
ரூ. 1 லட்சத்தை நோக்கி ஆபரணத் தங்கத்தின் விலை. சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.1600 கூடி ரூ.98,000க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து, ஒரு கிராம் 215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதம் மாறி திருமணம் செய்ததால் கொடூரம்
வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்ததால் மாப்பிள்ளை குடும்பத்தை வெட்டிவிட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்ற குடும்பத்தினர் 9 பேர் கைது.
மணப்பெண் கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு பெங்களூருவுக்கு தப்ப முயன்ற 9 பேரை போலீசார் சுற்றிவளைத்தனர். மாப்பிள்ளை ராகுல், அவரின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதி.
”அமித் ஷா ஆபத்தானவர்”
“2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, SIR-ஐ பயன்படுத்தி தகுதியுள்ள 1.5 கோடி வாக்காளர்களை சட்ட விரோதமாக நீக்க ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையரும் திட்டமிட்டுள்ளனர். அதனால்தான் சொல்கிறேன் அமித் ஷா மிகவும் ஆபத்தானவர்” -மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
ஆந்திரா பேருந்து விபத்து
ஆந்திரா: ஆன்மீக சுற்றுலாவுக்கு 37 பேருடன் சென்ற பேருந்து, மலைப்பாதை பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து. 10 பேர் பலி, உயிரிழப்பு அதிகரிக்கலாம் என தகவல். சீதாராமராஜு மாவட்டத்தில் சிந்தூர் - மாரேடுமில்லி மலைப்பாதையில், மூடுபனி காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை - பெண் உயிரிழப்பு
உ.பி.: மதுபோதையில் யூடியூப் வீடியோவைப் பார்த்து முனிஷ்ரா என்ற பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்த போலி மருத்துவர் பிரகாஷ். பெண்ணின் சிறுகுடல் மற்றும் நரம்புகள் வெட்டப்பட்டதால் அவர் உயிரிழப்பு. கல்நீக்க அறுவை சிகிச்சைக்காக சென்றவருக்கு இந்த கொடூரம் நேர்ந்துள்ளது. பெண் வலியுடன் துடிப்பதை பார்த்து அங்கிருந்து தப்பியோடிய பிரகாஷை, போலீசார் தேடி வருகின்றனர்.
இன்று வெளியாகும் அகண்டா 2?
பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான 'அகண்டா 2' படத்தின் காலை காட்சிகள் தமிழகத்தில் ரத்து. நேற்று இரவே தெலுங்கு மாநிலங்களில் படம் வெளியான நிலையில்,
KDM பிரச்னை காரணமாக தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் இருந்தது. தற்போது, பிரச்னைகள் தீர்ந்துவிட்டதாகவும், படம் மதியம் முதல் வெளியாகலாம் எனவும் தகவல்
துரந்தர் படத்திற்கு தடை
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி, வலதுசாரி சிந்தனை கொண்ட ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்று வரும் துரந்தர் படத்துக்கு, மத்திய கிழக்கு நாடுகள் தடை விதித்துள்ளது!
பாகிஸ்தானுக்கு எதிரான கதைக்களத்தை கொண்டிருப்பதால், பஹ்ரைன், குவைத், ஓமன், சவுதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை!
தென்னாப்ரிக்கா அணி அசத்தல்
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது தென்னாப்பிரிக்கா. |தென்னாப்பிரிக்கா - 13| ஆஸ்திரேலியா, இங்கிலாந்து - 12
இளையோர் ஆசியக்கோப்பை
U19 ஆசிய கோப்பை தொடர் இன்று தொடக்கம். முதல் போட்டியில் UAE அணியை எதிர்கொள்கிறது ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அணி





















