Top 10 news : நேபாளை உலுக்கிய நிலநடுக்கம்.. கனடா பிரதமர் ராஜினாமா- டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
நேபாளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:
நேபாளம்-திபெத் எல்லையில் இன்று அதிகாலை காத்மாண்டு அருகே 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் புது டெல்லி, சிலிகுரி மற்றும் பாட்னா ஆகிய இந்திய நகரங்களில் லேசான நில அதிர்வானது உணரப்பட்டது.
கனடா பிரதமர் ராஜினாமா:
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சிக்குள் கிளம்பிய எதிர்ப்பு, மக்களிடம் குறைந்த செல்வாக்கு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் தனது பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.
சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம்:
சட்டமன்ற கூட்டத் தொடரின் 2ஆவது நாளில், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அவையில் இரங்கல்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு:
டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இன்று(ஜன.07) மதியம் 2 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. டெல்லி தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாகக் கூறி ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்ற்றுவருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க விண்ணப்பம்
தமிழகத்தில் 500 எம்பிபிஎஸ், 88 முதுநிலை இடங்களை அதிகரிக்க மருத்துவக் கல்வி இயக்ககம், தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட 10 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 50 இடங்களுக்கு விண்ணப்பம்.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் வீரமரணம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணமடைந்தனர். பிஜப்பூரில் ஐஈடி வெடிகுண்டுகள் மூலம் நக்சல் படை நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள், வாகன ஓட்டுநர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் பனிப்புயல் - அவரச நிலை
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக மேரிலேண்ட் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்; மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் வீசி வரும் பனிப்புயலால் சுமார் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது
வெகு தொலைவில் இல்லை புல்லட் ரயில்
இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் நாட்டில் அதிவேக ரயில்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
172 பேரைத் தூக்கிலிட ஆயத்தமாகும் காங்கோ
ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்ட 172 பேரைத் தூக்கிலிட காங்கோ அரசு ஆயத்தமாகியுள்ளது. இதற்காக 70 கைதிகள் தலைநகர் கின்ஷாசாவிலுள்ள சிறைக்கும், 102 பேர் மாங்கலா மாகாணத்தின் அங்கெங்கா சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.