மேலும் அறிய
Advertisement
Top 10 News: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு! மதுரையில் ஹெலிகாப்டர் சேவை - செய்திகள் இதுவரை!
Top 10 News: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- டெல்லியில் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் சுட்டுக் கொலை – 2 பேரை தீவிரமாக தேடுகிறது போலீஸ்
- வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- சிவகங்கை அருகே நகைக்கடை சுவரில் துளையிட்டு 300 சவரன் நகைகள் கொள்ளையடித்த வழக்கு – 4 மாத தேடலுக்கு பின் 2 பேர் கைது
- தென்மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக மதுரையில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை – விரைவில் கொண்டு வர விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு
- கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் மூலம் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை– நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கைது
- மது விலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்
- நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் உள்ள போஸ்பாரா பகுதியில் 73 ஏக்கர் நிலம் திடீரென வனப்பகுதியாக மாற்றம் – முன்னறிவிப்பின்றி நோட்டீஸ் ஒட்டியதால் மக்கள் அதிர்ச்சி
- புகழ்பெற்ற மேல்மலையனூர் அம்மன் கோயிலில் அமாவாசையில் அம்மன் உற்சவம்; நள்ளிரவில் கையில் தீபம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு
- டெல்லி போலீஸ் நடத்திய திடீர் சோதனையில் ரூபாய் 5 ஆயிரத்து 600 கோடி போதைப்பொருள் சிக்கியது – தீவிரமடையும் விசாரணை
- மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் – முதல் போட்டியில் வங்கதேசம் – ஸ்காட்லாந்து, பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதல்
- இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு
- இஸ்ரேலை இரும்பு கவசம் கொண்டு பாதுகாப்போம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி
- 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மதுக்கடைகளை மூடினால் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் – மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் பேச்சு
- போதைப் பொருள்களால் அடுத்த தலைமுறையை அழிக்கும் மாடலே திராவிட மாடல் – எச்.ராஜா குற்றச்சாட்டு
- தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மதுவிலக்கு – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion