Top 10 News: தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! நெட் தேர்வு ஒத்திவைப்பு - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
UGC NET தேர்வு ஒத்திவைப்பு:
இனியாவது அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடங்கியது ஜல்லிக்கட்டு:
மதுரை அவனியாபுரத்தில் வீரர்களின் உறுதிமொழியுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் களம் காண்கின்றனர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - நாம் தமிழர் வேட்பாளர்:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது
முதல்வர் பொங்கல் வாழ்த்து:
உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்; உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்; புதுப்பானையில் பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை;
பொன்னம்பலமேட்டில் இன்று ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளனர் சபரிமலை மகரஜோதி முடிந்து திரும்பும் மக்கள் மலைப்பாதைகளை தவிர்க்க அறிவுறுத்தல்
தடம் புரண்ட ரயில்:
விழுப்புரத்திலிருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் புதுச்சேரி பயணிகள் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழ் இறங்கியது; பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்ட நிலையில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 12 பேருக்கு காயம் மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது; மாடுபிடி வீரர்கள் 6 பேர்; மாடு உரிமையாளர் 5 பேர்; பார்வையாளர் ஒருவருக்கு காயம் போலி ஆவணம், காயங்களுடன் கொண்டுவரப்பட்ட காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
பொங்கல் சிறப்பு ரயில்:
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மார்க்கமாக நள்ளிரவு 12.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் தென் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜப்பானின் கைக்ஷு பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை.
முதல்வர் கடிதம்:
நிலுவைத் தொகைக்கு நிதியை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் ரூ.1,056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்க ஊரக வளர்ச்சித் துறைக்கு அறிவுறுத்தக் கோரி கடிதம்