Watch Video : சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பதில் தகராறு..! நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டையிட்டுக்கொண்ட பெண்கள்..! வைரல் வீடியோ உள்ளே..!
சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சுங்கச்சாவடி பெண் ஊழியரும், பெண் பயணி ஒருவரும் சாலையிலே குடுமிப்பிடி சண்டையிட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய அரசு சார்பில் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சுங்கச்சாவடிகள் உள்ளது. சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும்போது, பல இடங்களில் டோல்கேட் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படுவதும், அவ்வப்போது அது கைகலப்பில் நடப்பதும் சமீபகாலமாக அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்ட்ராவில் சுங்கச்சாவடியில் இரு பெண்கள் தலை முடியைப் பிடித்து இழுத்து சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைளதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ள முக்கிய நகரம் நாஷிக். இங்கு பிம்பல்காவ்ன் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.
இந்த சுங்கச்சாவடிக்கு கடந்த புதன்கிழமை மாலையில் பெண் ஒருவர் தனது காரில் வந்தார். காரில் வந்த அந்த பெண்ணுக்கும், சுங்கச்சாவடியில் பணியாற்ற்றும் பெண் ஒருவருக்கும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த காரில் வந்த பெண் அந்த சுங்கச்சாவடி ஊழியரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
A shocking incident has come to light that a fierce fight took place between women at the Pimpalgaon toll booth near Nashik. @IGPNashikRange pic.twitter.com/1PwGTugSqo
— 𝕄𝕣.ℝ𝕒𝕛 𝕄𝕒𝕛𝕚 (@Rajmajiofficial) September 15, 2022
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஊழியர் அந்த பெண் பயணியை தடுக்க முயன்றதுடன் கோபத்தில் அவரது தலைமுடியை பிடித்தார். அந்த பெண் பயணியும் பதிலுக்கு சுங்கச்சாவடி பெண் ஊழியரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சண்டையிட்டார். இருவரும் மராத்தி மொழியில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளில் சரமாரியாக திட்டிக்கொண்டனர். பின்னர், சுங்கச்சாவடியில் பணியாற்றிய மற்ற பெண்கள் வந்து இரு பெண்களையும் சமாதானப்படுத்தி பிரித்தனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த பலரும் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பெண்கள் தலைமுடியை பிடித்துக் கொண்டு சண்டையிட்ட வீடியோவைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பல சுங்கச்சாவடிகளில் ஓட்டுநர்களிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் தரக்குறைவாக நடந்து கொள்வதும், பல இடங்களில் ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொள்வதன் காரணமாக இதுபோன்ற மோதல் மற்றும் வாக்குவாதம் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க : Crime : கொடூரமாக உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி... வஞ்சம் வைத்து கொன்ற உறவினர்.. திடுக்கிடும் கோர சம்பவம்
மேலும் படிக்க : Salman Khan : சல்மான்கானை கொல்ல பிளான் 'B'.. ஒரு மாதம் நோட்டமிட்டு பண்ணை வீட்டுக்கு அருகே தங்கிய கும்பல்.. ஷாக் தகவல்