ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என நிர்வாகிகள் சூளுரைத்துள்ளனர்.
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தொடங்கியது அதிமுக பொதுக்குழு:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், அதற்கு தயாராவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்போது, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என நிர்வாகிகள் சூளுரைத்தனர்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்:
கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக கபட நாடகம் ஆடுகிறது என கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிமராமத்து பணி, தடுப்பணைகள் கட்டும் பணி போன்றவற்றை திமுக அரசு முறையாக செய்யவில்லை எனவும் கண்டனம். டங்ஸ்டன் சுரங்க அனுமதியை கைவிட வேண்டும் என , மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதற்கும் எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.