Todays News Headlines: இந்தியாவுக்கு வரும் போர் விமானங்கள்.! ஐபிஎல் ஃபைனல்..! இன்றைய தலைப்புச் செய்திகள்!
Today Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.
* அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புகழாரம்; சமூக நீதிக்காக அயராமல் பாடுபட்டவர் என்றும் பாராட்டினார்.
* கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
* பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
* சென்னை பொழிச்சலூரில் மனைவி இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்த தந்தை தானும் தற்கொலை.
* தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு
* தமிழ்நாட்டில் 25 நாட்களாக நீடித்த அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்தது.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம் - பள்ளிக்கல்வித்துறை
* பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றும் முறையை தமிழக அரசு எளிமையாக்கியது.
* தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யகோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
இந்தியா:
* கடந்த 8 ஆண்டு ஆட்சி காலத்தில் மக்களை தலைகுனிய வைக்கவில்லை என குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
* மகாராஷ்டிராவில் முதல்முறையாக ஒமிக்ரானின் துணை வகை தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 7 பேரில் இருவர் வெளிநாடு சென்று வந்தவர்கள்
* மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்
* இந்தியா திராவிடர்களுக்கு, ஆதிவாசிகளுக்கு சொந்தமானது - ஓவைசி
உலகம்:
* இந்தியாவுக்கு போர் விமானங்கள், ஏவுகணை விற்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. சவுதி உள்ளிட்ட மேலும் 11 நாடுகளுக்கும் சப்ளை செய்யவுள்ளது.
* பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவுக்கு 30 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
* 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல். சாம்பியன் பட்டத்தை யார் வெல்வர்கள் என ரசிகர்கள் ஆவல்
* மகளிர் டி20 சாலஞ்ச் கிரிக்கெட் தொடர் வரலாற்றில், மூன்றாது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறது சூப்பர் நோவாஸ் அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்