மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: தமிழ்நாடு திரும்பிய முதலமைச்சர்.. ஐபிஎல்லில் முதல் வெற்றியை பதிவு செய்த குஜராத்..!
4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பினார்.
தமிழ்நாடு:
- நான்கு நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பினார்.
- 6100 கோடி மதிப்பில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- நிபந்தனையும் இன்றி தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
- பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்து ஆலோசனை செய்து முடிவு என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
- சென்னையில் வேன் விபத்தில் உயிரிழந்த மாணவரின் உடலுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- சென்னை பள்ளி மாணவன் விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியா:
- கொரோனா ரிஸ்க் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கம் செய்து அமெரிக்க உத்தரவு.
- துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நடனம்.
- நடிகர் திலீப் இடம் 7 மணி நேரம் காவல்துறையினர் விசாரண நடத்தினர்.
- கேரளாவில் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம்:
- ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அடுத்த மாதம் இந்திய வர உள்ளதாக தகவல்.
- ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து இர்பன் பகுதியை மீட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
- இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
- கென்யாவில் பெண்களுக்கு மட்டும் நடைபெற்ற கார் ஓட்டும் போட்டி மிகவும் வரவேற்பை பெற்றது.
- ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கிறிஸ் ராகை நடிகர் வில் ஸ்மித் ஓங்கி அறைந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சீனாவில் புதிதாக 1275 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion