மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்.. மகா சிவராத்திரி.. சில முக்கியச் செய்திகள்!!
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.
- எப்போதும் உங்களில் ஒருவனாக வாழ்வதே என்னுடைய விருப்பம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
- உக்ரைன் நாட்டிலிருந்து தமிழகர்களை மீட்பது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் முதலமைச்சர் பேச்சு
இந்தியா:
- உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க 4 மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைப்பு.
- உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்பது தொடர்பாக அனைத்து மாநில செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்.
- உக்ரைனிலிருந்து வரும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- போரில் தவிக்கும் உக்ரைனிற்கு மனிதாபமான அடிப்படையில் இந்தியா உதவி செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம்:
- உக்ரைன் -ரஷ்யா இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.
- உக்ரைன் கைப்பற்றுவது ரஷ்யாவின் எண்ணமில்லை என்று ரஷ்யா ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் திட்டவட்டம்.
- போரை நிறுத்த வேண்டும் மற்றும் படைகளை திரும்ப பெற வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.
- ரஷ்யா-உக்ரைன் போரில் நடுநிலைமை வகிக்க போவதாக பிரேசில் திட்டவட்டம்.
- ஐரோப்பாவில் எரிவாயு விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது.
விளையாட்டு:
- சர்வதேச போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர் வீராங்கனைகள் பங்கேற்க அனுமதியில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு.
- ரஷ்ய அதிபர் புதினிற்கு அளித்த உயரிய விருதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திரும்ப பெற்றுள்ளதாக அறிவிப்பு.
- இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion