மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: விரைவில் உயரும் மின்கட்டணம்... பிட்காயின் தடை பரிந்துரை.. சில முக்கியச் செய்திகள்!
தமிழ்நாட்டில் விரைவில் மின்கட்டணம் உயரும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் விரைவில் மின் கட்டணம் மாற்றம் அமலுக்கு வரும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.
- தமிழ்நாட்டின் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து தொடரும் என்று அமைச்சர் தகவல்.
- பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வந்த 5 நாட்கள் வரை கால அவகாசம் நீட்டிப்பு.
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2223 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியா:
- கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் குரங்கம்மை நோய் பாதிப்பு காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை.
- கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கூறியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு.
- மேற்கு வங்க ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக இல.கணேசன் ஏற்றார்.
- மத்திய பிரதேசத்தில் பாலத்தை கடக்க முயன்ற காரில் வெள்ளத்தில் சிக்கியது.
- கார்கில் போரில் பாகிஸ்தானை வென்ற நினைவு நாளை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மோட்டர் சைக்கிள் பயணம்.
- பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாக தகவல்.
உலகம்:
- லடாக் எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று இந்தியா-சீனா கூட்டறிக்கை.
- இலங்கையில் விவசாயக் கடன்களை ரத்து செய்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு.
- இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
- சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்ப நிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
- ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் வாட்டி வதைக்கும் வெப்பம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விளையாட்டு:
- பிர்மிங்ஹாமில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் 223 இந்தியர்கள் பங்கேற்க உள்ளனர்.
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் லெண்டல் சிம்மன்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார்.
- உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் ஸ்கீட் பிரிவு துப்பாக்கிச் சுடுதலில் 46 வயதான மைராஜ் அகமது கான் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion