மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: நீலகிரியில் கனமழை..இலவச பூஸ்டர் டோஸ்.. தோல்வி அடைந்த இந்தியா..இன்னும் பல செய்திகள்..
இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
தமிழ்நாடு:
- கர்நாடகாவில் மழை காரணமாக காவிரியிலிருந்து 1.14 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை தாண்டியுள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92 அடியை எட்டியுள்ளதாக தகவல்.
- அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
- உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த சொகுசு கார் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
இந்தியா:
- நாடு முழுவதும் 18 முதல் 59 வயதுக்குட்ப்பட்டோருக்கு இன்று முதல் 75 நாட்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
- மாநிலங்களவையின் அவை முன்னவராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
- குஜராத் மாநிலத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
- தொடர் கன மழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் இரண்டு அணைகளும் நிரம்பியுள்ளன.
- கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- குடியரசுத் துணை தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய நாளை பாஜகவின் கூட்டம் நடைபெறுகிறது.
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு வரும் 23ஆம் தேதி பிரிவு உபச்சார விழா நடத்தப்பட உள்ளது.
உலகம்:
- இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்சே விலகியுள்ளதாக தகவல்.
- இலங்கையின் அதிபர் தனி விமானம் மூலம் மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் தப்பியுள்ளார்.
- கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவ பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
- இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
- உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
- பிரான்ஸ் நாட்டில் பாஸ்டில் நினைவு தின அணிவகுப்பில் விமானப்படையினர் வானில் சாகசம்.
விளையாட்டு:
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
- உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் குழு பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
- செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion