Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றி வந்த நபர் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கியது. முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் நுழைந்து, அட்டகாசமாக தங்களுடைய விளையாட்டை விளையாட துவங்கினர்.
சில வாரங்கள் சுவாரஸ்யம் இல்லாமல் சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, வைல்டு கார்டு என்ட்ரிக்க பின்னர் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது. மேலும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏற்ற போல் விஷால் - தர்ஷிகா காதல் ஜோடிகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மெருகேற்றி வருகிறார்கள். ஆனால் பிக்பாஸ் கன்டென்ட் காதலா? அல்ல ரியல் காதலா? என்பது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததற்கு பின்னரே தெரியவரும்.
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, கடந்த வாரம் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார் வெளியேற்றப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், சிவகுமாரின் மனைவியுமான சுஜாவருணி கடைசி இடத்தில் இருந்தது சாச்சனா தான் என்றும், அவரை காப்பாற்றுவதற்காக விஜய் சேதுபதி தன்னுடைய கணவரை வெளியேற்றி விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அசோசியேட் இயக்குனர் ஸ்ரீதர் தற்கொலை:
அதாவது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குனர் ஸ்ரீதர் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்? கடன் விவகாரமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் ஸ்ரீதர் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அசோசியேட் இயக்குனர் ஸ்ரீதரின் மரணம் பிக்பாஸ் குழுவை ஸ்தம்பிக்க செய்துள்ளது.