மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: விசாரணை அறிக்கை தாக்கல்! புதிய தலைமை நீதிபதி! இன்றைய தலைப்புச் செய்திகள்!
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலீத் இன்று பதவியேற்கிறார்.
தமிழ்நாடு:
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகளுடன் காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர்.
- அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமி தான்யா உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
- கொடைக்கனல் புலவிச்சார்ரு அணையில் நீர் வீழ்ச்சி மிகவும் எழில் மிகும் வகையில் அமைந்துள்ளது.
- வைகை அணையிலிருந்து நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா:
- உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் இன்று பதவியேற்கிறார்.
- காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி அசாத் ஜம்மு-காஷ்மீரில் புதிய கட்சியை தொடங்க உள்ளார்.
- இலவச திட்டங்களுக்கான சுமையை மற்றவர்கள் மீது செலுத்தக்கூடாது. அதற்கான நிதியை தங்களிடம் இருந்து ஒதுக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ பதவியிருந்து நீக்கம் செய்யப்படுவாரா என்ற
- மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7 வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
- ட்ரோன் தொழில்நுட்பங்களை மேம்படுத்த ராணுவம் நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்தியாவின் கௌரவத்தை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
- டெல்லி சட்டப்பேரவையில் வரும் 29ஆம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் சுற்றுப்பயணம் செய்கிறார். சபர்மதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அடல் பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
உலகம்:
- பாகிஸ்தானில் பெய்த கனமழையால் 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
- இலங்கையில் இருந்து சீன உளவு கப்பல் அங்கிருந்து இந்திய பெருங்கடலில் தற்போது உள்ளதாக தகவல். அங்கு இருந்து இந்தியாவை உளவு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு:
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை-ஆஃப்கானிஸ்தான் மோதுகின்றன.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- லவுசானேவில் நடைபெற்ற டைமெண்ட் லீக் தடகள தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பட்டம் வென்றார்.
- லவுசானே தொடரில் பட்டம் வென்றதன் மூலம் டைமெண்ட் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார்.
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தேர்தல் 2024
கல்வி
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion