மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: ஆளுநரிடம் மீண்டும் நீட் விலக்கு மசோதா...வலுக்கும் ஹிஜாப் விவகாரம்.. தொடரை வெல்லுமா இந்தியா.. இன்னும் பல
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு:
- நீட் விலக்கு மசோதா மீண்டும் நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
- சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக வரும் 17,18 மற்றும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் இடங்களில் மது கடை செயல்படாது.
- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்.
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளிலும் மது பான கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
- குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் பதிலளித்தார்.
- திருவனந்தப்புரம் ஆற்றுக்காள் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா இன்று முதல் தொடக்கம்.
- உத்தரப்பிரதேச முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் நிறைவு. நாளை 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- பிஎஸ்.எல்வ.வி சி-52 ராக்கெட் வரும் 14ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.
- கர்நாடகாவில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்:
- அமெரிக்காவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களுக்கு தேவாலையத்தில் மணி ஒலி எழுப்பி மரியாதை.
- சூடானில் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
- கொலம்பியாவில் 4 டன் போதை பொருட்கள் கப்பல் மூலம் கடத்தல்.
- கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
- சிரியாவில் போரால் பல மக்கள் தங்களுடயை வீடுகளை இழந்துள்ளனர்.
விளையாட்டு:
- இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
- கே.எல்.ராகுல்,ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion