மேலும் அறிய
Advertisement
Todays News Headlines:12 நீதிபதிகளுக்கு கொரோனா.. 2-ஆவது ஒருநாள் போட்டி.. முக்கியச்செய்திகள்
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனிற்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ரூபாய் 2.87 கோடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு:
- ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாவது கட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
- முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனிற்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ரூபாய் 2.87 கோடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.
- வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக தகவல்.
- நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க கூறும் வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றன் விசாரணை.
இந்தியா:
- கொரோனா 3ஆவது அலையில் உயிரிழப்பு குறைந்ததற்கு தடுப்பூசியே காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
- மண்டல பூஜை காலம் முடிந்ததை அடுத்து சபரிமலை கோயிலின் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது.
- உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட உள்ளதாக தகவல்.
- கேரளாவில் கொரோனா பரவல் வேகமாக உள்ளதால் விரைவில் உச்சத்தை தொடும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உலகம்:
- 5ஜி சேவை விவகாரம் தொடர்பாக ரத்து செய்த அமெரிக்க விமானங்களை மீண்டும் இயக்க ஏர் இந்தியா முடிவு.
- உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது.
- அபுதாபியில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த இரண்டு இந்தியர்களின் உடல்கள் இன்று இந்தியா வருகிறது.
- லைபீரியா நாட்டில் நடைபெற்ற ஜெப கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்டவர் உயிரிழப்பு.
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-ராஜீவ் ராம் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு தகுதி.
- சையத் மோடி பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion