மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: மருத்துவ கலந்தாய்வு... மத்திய பட்ஜெட் விமர்சனம்...யு-19 உலகக் கோப்பை அரையிறுதி ! முக்கியச் செய்திகள்..
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.
தமிழ்நாடு:
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்.
- பணமோசடிக்கு ஆதாரம் உள்ளதால் ராஜேந்திர பாலாஜி மீதான எஃப்ஐ-ஆரை ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியுள்ளது.
- மத்திய நிதிநிலை அறிக்கை மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- மத்திய பட்ஜெட் 2022-23ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
- மத்திய பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- தொடர்ந்து 8ஆவது ஆண்டாக வருமானவரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.
- சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சமர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வருக்கு கடிதம்.
- மத்திய பட்ஜெட் ஒரு பூஜ்ஜியம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்
உலகம்:
- ஈக்குவடார் நாட்டில் கனமழை காரணமாக சாலைகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர்.
- சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலை கட்டி வருகின்றன.
- நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிபு கோரினார்.
- கனடாவில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம்.
விளையாட்டு:
- யு-19 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
- இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு தொடருக்காக இந்திய வீரர்கள் அகமதாபாத் சென்றடைந்தனர்.
- இந்திய தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்தியா வருகை.
- விராட் கோலி ஒரே மாதிரியான அனுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அறிவுரை.
- ஐபிஎல் ஏலத்திற்கான வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion