மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: மத்திய அமைச்சரவை கூட்டம்....தெ.ஆ. இந்தியா ஒருநாள் போட்டி..முக்கியச் செய்திகள்..
தமிழ்நாடு அலங்கார ஊர்தி தமிழ்நாட்டு குடியரசு விழாவில் இடம்பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு:
- தமிழக குடியரசு விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
- தமிழ்நாடு முழுவதும் இந்த அலங்கார ஊர்தி எடுத்து செல்லப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு.
- 10 மற்றும் 12 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்பு நடத்த வேண்டும் அரசு பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை.
- தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வர எலோன் மஸ்கிற்கு தமிழ்நாடு அரசு அழைப்பு.
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23,888 பேருக்கு மேலும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்தியா:
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
- இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.
- நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று மத்திய அரசு தகவல்
- பஞ்சாப் முதலமைச்சரின் உறவினரின் வீட்டில் அமலாக்கத்துறை பரிசோதனை செய்து வருகின்றனர்.
- கடற்படை கப்பலில் ஏற்பட்ட விபத்தில் 3 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர்.
உலகம்:
- தாலிபன்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தலைவர்கள் ஆஃப்கானிஸ்தான் சென்றுள்ளனர்.
- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்மூடி தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது என்று உலக சுகாதார மையம் வேண்டுகோள்.
- உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
- அபுதாபி தீவிரவாத தாக்குதலில் பலியான இரண்டு இந்தியர்களுக்கு நிதியுதவி வழங்கி ஐக்கிய அமீரக அரசு அறிவிப்பு.
- விஜய் மல்லையா வசித்து வரும் லண்டன் பங்களாவை அரசு நிர்வாகம் கைபற்றப்பட உள்ளதாக தகவல்.
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
- இந்திய ஒருநாள் அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வீரர் அஸ்வின் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
- இந்திய டெஸ்ட் அணியை முழுநேரமாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு பெருமை என்று கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion