மேலும் அறிய
Advertisement
Today Headlines: அதிகரிக்கும் ஒமிக்ரான்..கேஎல் ராகுல் சதம்..டெல்லியில் ஊரடங்கு.. இன்னும் பல!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
- ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை : தமிழ்நாடு வந்தது மத்திய குழு
- ஒமிக்ரான் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு
- தமிழ்நாட்டில் 15-18 வயதுள்ள 33.20 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி : ஜன.3 ம் தேதி முதல் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
- மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுத்தடுத்து குவியும் மோசடி புகார்கள்
இந்தியா:
- ஒமிக்ரான் தொற்று காரணமாக கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு
- ஒமிக்ரான் பரவலைத் தடுக்கும் விதமாக மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
- பீகாரில் நூடுல்ஸ் ஆலையின் கொதிகலன் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - 12 பேர் படுகாயம்
- ஒமிக்ரானுக்கு எதிராக விழிப்புடன் செயல்பட வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு
- டெல்லியில் ஒமிக்ரான் பரவல் காரணமாக இன்று இரவு முதல் இரவுநேர ஊரடங்கு அமல்
- பிரபல நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்தது – விஷமற்ற பாம்பு என்பதால் ஆபத்தின்றி பிழைத்தார்
உலகம்:
- நிறவெறிக்கு எதிராக போராடிய தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார் – உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்
- மியான்மர் நாட்டில் 30 பேர் எரித்துக் கொலை – உலக நாட்டு தலைவர்கள் கண்டனம்
- ஆப்கானிஸ்தானில் ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியே வரக்கூடாது – தலிபான்கள் புதிய உத்தரவு
விளையாட்டு :
- விஜய் ஹசாரோ தொடரின் இறுதிப்போட்டியில் இமாச்சல பிரதேசத்திடம் போராடி தோற்றது தமிழ்நாடு
- தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவிப்பு கேஎல் ராகுல் சதம், அகர்வால் அரைசதம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion