மேலும் அறிய
Advertisement
Headlines Today : நயன் - சிவன் விதிகளை மீறவில்லை.. தங்கக் கவச வழக்கில் திடீர் திருப்பம்.. மொபைல் பே- க்கு தடை.. இன்னும் பல!
Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே விரிவாக காணலாம்.
தமிழ்நாடு :
- கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் பரிந்துரை
- ஆப் மூலம் செய்யப்படும் முன்பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் : போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
- நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி, இரட்டை குழந்தைகள் விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை - சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ம் தேதி தொடங்கும் - சென்னை வானிலை மையம் தகவல்
- சேலம் பெண்கள் கிளைச்சிறையில் லெஸ்பியன் விவகாரத்தில் மோதல் : 2 வார்டன்கள் குடுமிப்பிடி சண்டை
- வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை நேற்று முதல் அமல் - சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவச உரிமை வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரின் கோரிக்கையும் நிராகரிப்பு
- வர்த்தக சின்னம் மீறல் தொடர்பான வழக்கில் மொபைல் பே பணப் பரிவர்த்தனை செயலிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- அக்டோபர் 31ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியாகும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
- மழைநீர் வடிகால் பணிகள் இடங்களில் முன்னெச்சரிக்கை தடுப்புகள் அடையாள பலகைகள் (SignBoards) வைக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்
இந்தியா:
- காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்று கொண்டார் : முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
- ரூபா தாளில் பிள்ளையார் மற்றும் வரலட்சுமி படத்தை அச்சிட வேண்டும் - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கோரிக்கை
- உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் (Amethi) உள்ள ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுத்தபோது 200 ரூபாய் கள்ளநோட்டு வந்ததால் பயனாளர் அதிர்ச்சியடைந்தார்.
- காங்கிரஸ் கட்சியில் இதுவரை இருந்த காரிய கமிட்டிக்கு பதிலாக வழிகாட்டுதல் குழுவை உருவாக்கி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டுள்ளார்.
- கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஸ்ரீநாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் முபாரக் பாஷாவுக்கு ஷோ- காஸ் நோட்டீஸ்
- ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும்: அசாதுதீன் ஒவைசி
உலகம்:
- இங்கிலாந்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ரிஷி சுனக் திருநர்களுக்கு எதிரானவர் என்கிற சர்ச்சை கிளம்பியுள்ளது.
- 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம்: பொது மன்னிப்பு வழங்கிய இலங்கை - 8 தமிழர்கள் விடுதலை
- உங்கள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் என்னை மிகவும் ஈர்த்துவிட்டார் என்று ஜெய்சங்கருக்கு ஐக்கிய அமீரக எமிரேட் நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் சுல்தான் அல் ஒலாமா சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார்.
விளையாட்டு:
- இந்திய டென்னிஸ் வீராங்கனை கர்மன் கவுர் தண்டி சர்வதேச அளவில் 217 வது இடத்தையும், இந்தியளவில் நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளார்.
- பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்ததன் மூலம் ஐசிசி டி20 பட்டியலில் 9 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி நெதர்லாந்து அணியை சந்திக்கிறது. சிட்னியில் தொடங்கும் இந்த போட்டியானது மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion