மேலும் அறிய
Advertisement
Today Headlines : பிரதமருக்கு முதல்வர் கடிதம்..! ரஷ்யா-உக்ரைன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை..! இந்தியா அபார வெற்றி..! முக்கியச்செய்திகள் பல உள்ளே..!
கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி
- சென்னையில் போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
- மயிலாடுதுறையில் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி, 2 வயது குழந்தை என ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம்
- மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ரத்து
இந்தியா :
- நீட் விலக்கு மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க தி.மு.க. ஒத்திவைப்பு நோட்டீஸ்
- ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு
- ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான எண்ணெய் வர்த்தகத்தை ரூபாய் மற்றும் ரூபிளை கொண்டு நடத்த நடவடிக்கை
- அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தடுப்பாடு இல்லை – மத்திய அரசு விளக்கம்
- சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 4 மாநிலங்களுக்கும் ஆட்சியமைக்க பார்வையாளர்களை அமைத்தது பா.ஜ.க.
- ஹிஜாப் வழக்கில் இன்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது
உலகம் :
- ரஷ்யா – உக்ரைன் இடையே இன்றும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை தொடரும்
- உக்ரைன் நாட்டில் தாக்குதலை அதிகரித்தது ரஷ்யா – குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஏவுகணை வீச்சு
- ரஷ்யாவிற்கு உதவினால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் – சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
- கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு
விளையாட்டு :
- பெங்களூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி
- உள்நாட்டு மண்ணில் தொடர்ந்து 15வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை
- இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீிழ்த்திய டேல் ஸ்டெயினின் பின்னுக்கு தள்ளி 8வது இடத்திற்கு முன்னேற்றம்
- கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலே டி20 மற்றும் டெஸ்ட் தொடரை எதிரணியை வாஷ் அவுட் செய்து ரோகித் சர்மா அபாரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
தஞ்சாவூர்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion