மேலும் அறிய
Advertisement
Today Headlines 16th June 2023: நேற்றைய நிகழ்வுகளும்.. இன்றைய சம்பவங்களும்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines News: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை கிண்டியில் கருணாநிதி பெயரில் 376 கோடி ரூபாய் செலவில் அதிநவீன மருத்துவமனை - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை வரவிடாமல் தடுத்து விட்டனர் - கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம் என முதலமைச்சர் பேச்சு
- அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கவேண்டும் என முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் எழுதியதன் பின்னனி என்ன? - பாஜகவின் ஏஜெண்டை போல ஆளுநர் செயல்படுவதாக அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
- செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியா? - மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பு
- சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி
- செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் - ஆளுநர் ரவியை சந்தித்து அதிமுக தரப்பு கோரிக்கை
- திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஜுலை 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
இந்தியா:
- குஜராத்தில் கரையை கடந்தது பிபர்ஜாய் புயல் - 22 பேர் காயம் இருளில் மூழ்கிய 940 கிராமங்கள் - விவரங்களை முதலமைச்சரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி
- வீர மரணம் அடைந்த அமைதிப்படையினருக்கு ஐ.நா. தலைமையகத்தில் நினைவுச் சின்னம் - பிரதமர் மோடி
- டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தில் ஜவஹர்லால் நேருவின் பெயர் நீக்கம் - பிரதமர்கள் அருங்காட்சியகம் என்று பெயரை மாற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ஊரடங்கிற்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம் நீடிப்பு - துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம்
- மணிப்பூரில் நிலமை கவலைக்கிடமாக உள்ளது - மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேதனை
- காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் இந்தியாவில் பேஸ்புக் முழுமையாக முடக்கப்படும் - கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
- ஜுலை 1ம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரையில் தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவு பொருட்களுக்கு தடை - ஆரோக்கியமான உணவுகளை எடுத்துச் செல்ல பரிந்துரை
உலகம்:
- கனடாவில் பயணிகள் பேருந்து மீது டிரெய்லர் லாரி மோதிய விபத்தில் 15 முதியவர்கள் பலி
- அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீல் சேரில் வந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்த போப் பிரான்சிஸ்
- மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை - அதிரவைத்த வடகொரியா
- பெரு நாட்டில் தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து 25 நாய்களை காப்பாற்றிய இளைஞர் - ஹீரோ என அழைத்து குவியும் பாராட்டுகள்
- ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாலியல் தொல்லை - பெண் எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு
- மனித உடலுறுப்புகள் திருடி விற்பனை - ஹார்வர்ட் மருத்துவ கல்லூரி பிணவறை மேலாளர் கைது
விளையாட்டு:
- முதன்மை ஸ்பான்சருக்கான டெண்டரை அறிவித்தது பிசிசிஐ - குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு தடை
- பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைப்ரிட் முறையில் நடைபெறும் ஆசியகோப்பை தொடர் - ஆகஸ்ட் 31ம் தேதி தொடக்கம்
- இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் - காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்
- திருப்பூரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion