மேலும் அறிய

Headlines Today : ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு.. 5 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.. அரையிறுதிக்குள் இங்கிலாந்து அணி.. இன்னும் பல!

Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு :

  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை படிக்கும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டி தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் பள்ளிகளிலே பயிற்சி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
  • திருச்செந்தூரில் ISRO-இன்  சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.
  • தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
  • தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி செட்-டாப் பாக்ஸ்களுக்கு பதில் தனியார் நிறுவன செட்-டாப் பாக்ஸ்களை சப்ளை செய்து 41 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • புதிய வாகன சட்டம் அமலுக்கு வந்த 10 நாட்களில், சென்னையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்தியா:

  • ஆந்திர பிரதேசம் நந்திகாமா என்.டி.ஆர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை பேரணியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீசி தாக்குதல்.
  • ஒடிசா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
  • மும்பை ஜே.ஜே மருத்துவமனையின் கீழ் 132 ஆண்டுகள் பழமை வாய்ந்த 200 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
  • டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் மாசுபடுத்தும் வாகனங்களின் பயன்பாட்டு உத்தரவை மீறினால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
  • புதுதில்லியில் முப்படைகளின் ராணுவத் தலைமைத் தளபதிகளின் உச்சிமாநாடு வரும் நவம்பர் 7 ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • ஆதார் கார்டு இல்லாததால் மருத்துவமனையில் தமிழக பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்ததால் அவர் குழந்தையுடன் உயிரிழந்துள்ளார்.

உலகம்:

  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவை புகழ்ந்து மீண்டும் பேசியிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
  • அமெரிக்கா உக்ரைனுக்கு கூடுதலாக 400 மில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவியை அறிவித்துள்ளது.
  • ரஷியாவின் கோஸ்ட்ரோமா நகரில் உள்ள மதுபான விடுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
  • இம்ரான்கானின் உரைகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை ஒளிபரப்பு செய்ய பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.

விளையாட்டு:

  • ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.
  • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் அமைச்சர் பொன்முடியின் மகன்
  • இலங்கையை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்குள் இங்கிலாந்து அணி நுழைந்தது.
  • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் சிகாமணி முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
  • டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி, ஜிம்பாவே அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget