மேலும் அறிய
Advertisement
Headlines Today : ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி..15 மாவட்டங்களில் இன்று கனமழை..இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும், மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை - ஆளுநர் தமிழிசை
- சென்னை பாரிமுனையில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் மழையால் வீடு இடிந்து ஒருவர் உயிரிழப்பு
- இன்ஜினியரிங் முதல் கட்ட கலந்தாவில் 4வது சுற்று இன்றுடன் நிறைவடைந்த நிலையில், விருப்ப இடங்களை உறுதி செய்ய மாணவ-மாணவிகளுக்கு நவம்பர் 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- யு.ஜி.சி. நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத அமர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
- தமிழ்நாட்டில் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ 12 உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- டெல்லியில் காற்று மாசுவை குறைக்க 50% ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
- டெல்லியில் கால வரையறை இன்றி தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- சபரிமலை கோயிலில் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
- பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சுரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- நாடு முழுவதும் 2021-22 காலகட்டத்தில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது - மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
- கோவாவில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் காரணம் போதைப் பொருட்களே என்று மத்திய அமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
உலகம்:
- வெப்பமயமாதல் காரணமாக, உலகின் மிகவும் பிரபலமான சில பனிப்பாறைகள் 2050 ஆம் ஆண்டிக்குள் மறைந்துவிடும் என யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
- மெட்டாவுக்குச் சொந்தமான (instant messaging) சேவையில் குழு உரையாடல்களை ஒழுங்கமைக்க ஒரு "கம்யூனிட்டி" (community) கீழ் தனித்தனி குழுக்களை வைத்திருக்கும் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.
- சீன ஏவிய ராக்கெட்டில் இருந்து ஒரு பெரிய பகுதி வெள்ளி அல்லது சனி அன்று பூமியில் மீண்டும் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தான் குஜ்ரன்வாலாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நிலையில், இச்சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளையாட்டு:
- டி20 உலகக் கோப்பை தொடர் ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணிக்கான ஆட்தேர்வில் தொடக்கத்தில் முகமது ஷமி பெயர் இடம்பெறாமல் இருந்தது அவருக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியது என்று ஷமியின் பயிற்சியாளர் முகமது பத்ருதீன் தெரிவித்தார்.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion