மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: அறியாத பல நிகழ்வுகள்.. ஒரே நிமிடத்தில் அறிய.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறையினர் சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
- தமிழ்நாட்டில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து
- தமிழ்நாட்டில் திமுகவை எதிர்ப்பதில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே போட்டி நடப்பதாக அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்
- தமிழகத்தில் திமுக-பாஜக இடையே தான் போட்டி என அண்ணாமலை கருத்து - வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்ற கருத்துகளை கூறி வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
- பட்டியலின பெண்ணுக்கு நீதி மறுக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு - “அரசியல் தலைவராக” தன்னை மாற்றிக் கொண்டு பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
- பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தை - போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
- செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்வு எதிரொலி - திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கண்டித்து திருவண்ணாமலையில் 2000 மாணவர்கள் போராட்டம்
- நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து வரும் அக்டோபர் 10ம் தேதி தொடக்கம் - ஒரு நபருக்கு 6500 ரூபாய் கட்டணம் நிர்ணயம்
- சனாதனம் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
- டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுபானம் வாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் விற்பனையாளர்களுக்கு பரிசு - அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
- தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை (அக்டோபர் 8) சென்னை கடற்கரை - தாம்பரம் வரையிலான 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து
இந்தியா:
- இடதுசாரி தீவிரவாதம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
- சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை வெளியிட்ட பிகார் அரசு - விளக்கம் அளிக்குமாறு மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
- வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் சிக்கிம் - உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு
- 4வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு
- மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்
- 5 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
- எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பொய் வழக்குப் போடுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
- தேர்தலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம் - இந்தியா கூட்டணி உண்மையில் சவால் தான் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து
உலகம்:
- சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது துருக்கி ராணுவம் வான்வழி தாக்குதல் - 15 பேர் உயிரிழப்பு
- இங்கிலாந்தில் ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிப்பு
- நியூசிலாந்தில் உள்ள குயின்ஸ்டவுன் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் - தாமதமாக புறப்பட்ட விமானங்களால் பயணிகள் அவதி
- சிங்கப்பூரில் கடந்த இரு வாரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்பு - கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை
- ஈரான் சிறையில் அடைக்கப்பட்ட பெண் உரிமைகள் ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
விளையாட்டு:
- ஆசிய விளையாட்டு தொடர் - ஆடவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
- ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய அணி 100 பதக்கங்களை வெல்வது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
- இந்திய வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு - ஆஸ்திரேலியா அணியுடனான ஆட்டத்தில் விளையாட மாட்டார் என அறிவிப்பு
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நாளை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion