மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: என்ன நடந்தது..? இன்று என்ன நடக்கப்போகுது... தலைப்பு செய்திகள் சுடச்சுட உங்களுக்காக!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் அடங்கிய குழு அமைப்பு : பள்ளிக்கல்வித்துரை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைய சகித்துக் கொள்ள முடியாது; அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் - மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது முறிந்ததுதான் - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
- அதிமுக ஆட்சியில் சாலை போடாமல் மதுரை துணை மேயர் முறைகேடு?- முரண்பாடு உள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க நீதிமன்ற கிளை உத்தரவு
- விழுப்புரத்தில் நவாரத்தி விழாவிற்கு 35 வடிவிலான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்
- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை இரண்டு வார காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
- தற்காப்பாக இருக்கும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கே டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது. டெங்கு கொசுக்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- சிக்கிமில் பயங்கர மேகவெடிப்பு : 22 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் வெள்ளப்பெருக்கில் மாயம் - 8 பேரின் சடலங்கள் மீட்பு
- உபா சட்டத்தில் கைதான நியூஸ் க்ளிக் ஆசிரியருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்
- மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு மருத்துமனைகளில் 31 பேர் உயிரிழந்த விவகாரத்தை தாமாக முன்வந்து நேற்று விசாரித்தது மும்பை உயர்நீதிமன்றம்.
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- உலக விலங்குகள் தினமான நேற்று, செல்ல நாய் ஒன்றை, தனது தாயாருக்கு அன்பு பரிசாக வழங்கியுள்ளார் ராகுல் காந்தி.
- டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
- உஜ்வாலா திட்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம்:
- அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு - 5 மாணவர்கள் காயம்.
- அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- சீன தொழிற்சாலையில் விஷவாயு தாக்கு 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
- வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மருந்து இறக்குமதிக்காக இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்ய இருக்கிறது.
- சிறையில் இம்ரான் கான் விஷம் வைத்து கொல்லப்படலாம் என அவரது வழக்கறிஞர் அச்சம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
விளையாட்டு:
- ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 81 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
- உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று பிரமாண்டமாக தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து பலப்பரீட்சை.
- ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிஷோர்குமாருக்கு ரூ.1½ கோடி பரிசு - ஒடிசா முதலமைச்சர் அறிவிப்பு.
- ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வென்று அசத்தல்.
- இந்திய மல்யுத்த வீரர் சுனில் குமார் 87 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சாதனை படைத்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion