மேலும் அறிய
7 AM Headlines: நேற்றைய நாளில் உங்களைச் சுற்றி இவ்வளவு விஷயங்கள் நடந்துருக்கு: காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் - அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு அரணாக இருக்கும் என உறுதி
- வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை - ஏற்கனவே திட்டமிட்டபடியே தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதாக விளக்கம்
- சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியே வடமாநில தொழிலாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது - கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் கூட்டாக பேட்டி
- திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசிய மாநகர காவல் ஆணையர் - இந்தியில் பேசி குறைகளை கேட்டறிந்து பாதுகாப்பு குறித்து விளக்கம்
- வடமாநில தொழிலாளர்கள் நிலை குறித்து பீகார் குழு தமிழகம் வருகை - சென்னையில் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை
- வடமாநில தொழிலாளர்கள் அதிகமுள்ள பகுதியில் காவல்துறையினர் கலந்துரையாடி விழிப்புணர்வு - தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக தொழிலாளர்கள் கருத்து
- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வடமாநில தொழிலாளர்கள் முக்கியமானவர்கள் - அவர்களுக்கு எதிராக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை என பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்
- மார்ச் 9 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என தகவல்
- இந்தியாவில் தேசபக்தியையும், கடவுள் பக்தியையும் பிரிக்க முடியாது - ரமண மகரிஷியின்143வது ஆண்டு ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
- கொடைக்கானல் மலைப்பகுதியில் 2023 ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
- ஹோலி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
இந்தியா:
- வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் என பரவிய வீடியோக்கள் போலியானவை - வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை
- இந்தியாவில் சத்தமின்றி வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சர்வதேச மருத்துவ கூட்டமைப்பு எச்சரிக்கை - ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்
- செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி பணமோசடி செய்த விவகாரத்தில் 10க்கும் மேற்பட்டோர் கைது - 25 ஆயிரம் சிம்கார்டுகள், 2500 செல்போன்கள் பறிமுதல்
- டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியோவுக்கு மேலும் 2 நாட்கள் சிபிஐ காவல் - விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறிய நிலையில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
- இந்திய-இலங்கை மீனவர்கள் கலந்துக்கொண்ட கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா நிறைவு
- 2022-23 ஆம் ஆண்டுக்கான தங்கப் பத்திரம் விற்பனை மார்ச் 6 ஆம் தேதி தொடக்கம் - 10 ஆம் தேதி வரை முதலீடு செய்ய அவகாசம்
- சோழர்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்று மக்களுக்கு பயனளித்து வருகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
உலகம்:
- பிலிப்பைன்ஸ் நாட்டில் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண கவர்னர் சுட்டுக்கொலை
- கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி மரணம் - வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் மரணத்தில் போலீசார் சந்தேகம்
விளையாட்டு:
- தாய்லாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை ஸ்னூக்கர் தொடர் - ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை அனுபமா தங்கம் வென்றார்
- முதலாவது மகளிர் ப்ரிமீயர் லீக் தொடர் கோலகலமாக தொடக்கம் - முதல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion