மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நாடு முழுவதும் நடந்த நிகழ்வுகளை அறிய வேண்டுமா..? ஏபிபியின் 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: அரசு சார்பில் ஓராண்டு கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
- கண்ணுக்கு தெரியாத கணக்குக்கு மாற்றம்; ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.5 கோடி மாயம் - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றசாட்டு
- முதல்வர் காலை உணவு திட்டத்திற்கு ரூ.1 கோடி செலவில் மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
- தஹி சர்ச்சையில் பின் வாங்கிய மத்திய அரசு; தயிர் என்றே விற்கலாம் என அறிவிப்பு
- அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
- சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ, மாணவிகள் போராட்டம்- ஏப்ரல் 6ம் தேதி வரை மூட உத்தரவு
- தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி வெயில் - வானிலை ஆய்வு மையம் தகவல்
- இருபது ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்டவைகளை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- நரிகுறவர்களை திரைப்படம் பார்க்க அனுமதிக்காத ரோஹினி திரையங்க பணியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்க அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
- மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மேற்குவங்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
- பிரதமர் மோடி 9ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள முதுமலைக்கு வருகை தர உள்ளார். அங்கு ஆஸ்கர் வென்ற ஆவண குறும்படத்தின் கதாபாத்திரங்களான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்தனர்.
- வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மியான்மர் - சென்னைக்கு இடையே விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அரிய வகை நோய்களின் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- மத்தியப்பிரதேசத்தில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டி ஒருவரின் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்ற சம்பவம் கடும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
உலகம்:
- உலக வங்கித்தலைவராக இந்திய வம்சாவளையான அஜய் பங்கா போட்டியின்றி தேர்வு ஆகிறார்.
- பிலிப்பைன்சில் பயணிகள் கப்பல் தீப்பிடித்து 32 பேர் உயிரிழந்தனர். 230 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிரான்சில் ஆலயங்களில் தீ வைத்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- அமெரிக்காவில் கொரொனா தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
- ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி உள்ளார்.
விளையாட்டு:
- 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோத இருக்கின்றன.
- கடந்த சீசனில் சென்னை அணிக்காக அறிமுகமாகி 16 விக்கெட்களை எடுத்துகொடுத்த முகேஷ் சவுத்ரி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
- எல்லாரும் விளையாடுகிறார்கள் நான் மட்டும் இல்லையா என்று ரிஷப் பந்த் கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்த அப்டேட் என ரசிகர்கள் பூரிப்படைந்தது வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion