மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: என்ன நடந்தது நேற்றைய நாளில்.. இன்று என்ன நடக்கிறது..? அனைத்தும் தலைப்பு செய்திகளாய் உங்களுக்காக!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ’கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி பிரச்சினையும் வந்து விடுகிறது' - வானதி சீனிவாசன்
- அலங்காநல்லூர் அருகே தனியார் நிலப் பகுதியில் 600 ஆண்டு பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.
- தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகள் நியமனம் - சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு
- கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அக்டோபர் 15-ந் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
- உலகம் முழுவதும் மருத்துவக் கல்விக் கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில், மருத்துவ ஆணையத்தின் புதிய விதி மிகவும் பிற்போக்கானது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் விசாரிக்கப்படவுள்ளார்.
இந்தியா:
- தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் முக்கியம் - பிரதமர் மோடி அழைப்பு
- மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் (இன்றுடன்) செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
- இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
- காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு - தடையை மீறி ஊர்வலம் சென்ற கன்னட அமைப்பினர் கைது
- வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நேற்று கர்நாடகா மாநிலம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
உலகம்:
- வியட்நாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு.
- பாகிஸ்தானில் மசுதியில் குண்டு வெடித்து 55 பேர் உயிரிழப்பு - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
- தெற்கு சூடானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு ரஷ்யா உதவும் - அதிபர் புதின்
விளையாட்டு:
- ஆசிய விளையாட்டு போட்டி பதக்க பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
- 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
- நேற்று நடந்த உலகக் கோப்பை பயிற்சு ஆட்டங்களில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் வெற்றிபெற்றன.
- ஆசிய விளையாட்டு போட்டி: தடகள போட்டியில் இந்தியாவின் கிரன் பலியான் 17.36 தூரம் குண்டு எறிந்து வெண்கலம் வென்றார்.
- ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion