மேலும் அறிய

7 AM Headlines: உலக நிகழ்வுகளை தெரிந்துகொள்ள.. இதோ காலை 7 மணி தலைப்பு செய்திகள்!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • வேட்பாளரை வாபஸ் பெற்ற நிலையில் சென்னையில் இன்று ஓபிஎஸ் ஆலோசனை: இடைத்தேர்தல் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.
  • மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில் 2,300 வரவேற்பு அதிகாரிகள் நியமனம்- டிஜிபி சைலேந்திர பாபு தகவல்
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல விடுதிகளில் மாணவர்களின் கல்வி மேம்பட ‘டிஜிட்டல் தகவல் பலகை’
  • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
  • காங்கிரஸ் கட்சியை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
  • கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு சம்பவம்: தமிழக மீனவரின் உடல் ஒப்படைப்பு
  • அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை - முக்கிய ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • "நானும் ஒரு விவசாயி குடும்பம் தான்" வயல்வெளில் பார்த்தினிய செடிகளை களையெடுத்த கூட்டுறவு கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன்
  • பட்ஜெட் கூட்டத் தொடரில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடைபெறும் - ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை

இந்தியா: 

  • நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைகோள்கள் விண்ணில் பாய்ந்தன.
  • சிவசேனா கட்சியின் சின்னத்தை பெற ஷிண்டே அணி ரூ2000 கோடி லஞ்சம் - உத்தவ் தாக்கரே ஆதரவு எம்பி பரபரப்பு குற்றசாட்டு
  • கடந்த ஓராண்டில் 15,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியா புதிய சாதனை - மத்திய அரசு தகவல்
  • இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டிங் சர்வீஸில் (டிசிஎஸ்) பணி நீக்கம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
  • விருப்பமில்லாத பெண்ணை வா வா என அழைத்தாலும் பாலியல் குற்றம்தான் என, மும்பை நீதிமன்றம் அதிரடியாக  தீர்ப்பளித்துள்ளது.
  • இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் வெள்ளிக்கிழமை பிப்ரவரி மாதத்தின் வெப்பமான இரவு, குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 டிகிரியாக பதிவானது என உள்ளூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • உடை சாராமல் உடல் உறுப்பை குறிப்பிடாமல் தோற்றத்தை குறித்தோ அல்லது அவரின் நடையை குறித்தோ கருத்து தெரிவிப்பது பாலியல் ரீதியான கருத்துகளாக கருத முடியாது என டெல்லி நீதின்றம் தெரிவித்துள்ளது. 

உலகம்:

  • சஹாரா பாலைவனத்தில் உள்ள 1.2% நிலப்பகுதியை வைத்து உலகத்துக்கே மின்சாரம் வழங்க முடியும் - அணுசக்தி நிபுணர் மெஹ்ரான் மொலேம் 
  • சிரியாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
  • நாடு முழுவதும் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் கியூபாவின் 11 மாகாணங்கள் இருளில் மூழ்கியது.
  • அமெரிக்க அரசு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பலூனை சுட்டு வீழ்த்த ரூ.3.63 கோடி செலவழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

விளையாட்டு:

  • மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர்: அயர்லாந்து அணியை இன்று சந்திக்கிறது இந்திய அணி.
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.
  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • பெங்கால் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சவுராஷ்ட்ரா அணி ரஞ்சிக்கோப்பையை 2வது முறையாக கைப்பற்றியுள்ளது.
  • ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான போட்டியில் மன்கட் முறையில் அவுட் செய்ய முயற்சி செய்த அஸ்வின் செயலுக்கு கை தட்டி சிரித்த விராட் கோலியின் வீடியோ வைராலாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget