மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்றைய நாளின் நடப்பு நிகழ்வுகள்.. ஒரு நிமிடத்தில் தெரிந்துகொள்ள.. ஏபிபி-யின் தலைப்பு செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: 15 சுற்றுகளாக நாளை வாக்கு எண்ணிக்கை
- ரூ. 1,136 கோடி செலவின் 44 மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல்: பள்ளி மாணவர்களின் காலை சிற்றுண்டி விரிவாக்கம் உள்பட 7 திட்டங்களை தொடங்கி வைத்தார்.
- சென்னையில் அமலுக்கு வந்தது புது ரூல்ஸ்: சிக்னலில் எல்லைக்கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம்
- இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகை : முதலமைச்சர் முக ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்பு
- 70வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொண்டர்களை சந்திக்கிறார்; தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு
- ஜிஎஸ்டி மாடலில் மாற்றம் தேவை ; தமிழ்நாட்டிற்கு ரூ.7000 கோடி நிலுவை தொகை பாக்கி - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
- கோயில்களுக்கு இனி யானை வாங்கக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 1,068.50 க்கு இருந்த எரிவாயு சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ. 1,118.50 க்கு விற்பனையாகி வருகிறது.
இந்தியா:
- அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்: உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி
- அமைச்சர் உதயநிதி பிரதமர் மோடியுடன் சந்திப்பு: நீட் விலக்கு, வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை
- நாகலாந்து சட்டசபை தொகுதிகளுக்கு உள்ள நான்கு வாக்கு சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மக்களை முட்டாளாக்கும் போலி அமைப்பு தேர்தல் ஆணையம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
- கொல்கத்தாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5 குழந்தைகள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
- பிரதமர் மோடியின் விழாவுக்கு குவிந்த கூட்டத்தை பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் பதற்றம் அடைந்துள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
- மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா ராஜினாமா- அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் விலகல்
உலகம்:
- ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
- ஜெர்மனியில் ஆரம்பப் பள்ளியின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
- இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் சீனா பங்கேற்கும் என இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
விளையாட்டு:
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடக்கம்
- 2023 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பும்ரா விளையாட வாய்ப்பில்லை இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.
- மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கருக்கு முழு சிலையை அமைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) முடிவு செய்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion