மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்னென்ன? இதோ காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- அதிமுக கூட்டணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் - தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதால் நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு
- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்தார் - அவர் சார்பாக மேலும் 31 பேர் விருப்பமனு பெற்றனர்
- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்
- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் வழக்கு - எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
- எத்தனால் மற்றும் சரக்கு போக்குவரத்து கொள்கை 2023 தொடர்பான சிறப்பு திட்டத்தை வெளியீட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முதலீடு, உற்பத்தி, வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என நம்பிக்கை
- குன்னூர் அருகே சுற்றித்திரியும் 3 காட்டு யானைகள் - பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தல்
- சென்னையில் அதிகாலையில் தொடரும் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
- மார்ச் 26 ஆம் தேதி பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அண்ணாமலை திட்டம் - அதிமுகவுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்
- வீடுகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் பயன்பாட்டுக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்க திட்டம் -நகர எரிவாயு வினியோக கொள்கையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- கன்னியாகுமரிக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகை - திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டார்
- ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- அருணாச்சலப்பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணமடைந்த மேஜர் ஜெயந்தின் உடன் ராணுவ மரியாதையுடன் தகனம்
- 75% வருகைப்பதிவு கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
இந்தியா:
- இந்தியா - வங்கதேசம் இடையே முதல் எரிவாயு குழாய் இணைப்பை தொடங்கி வைத்த இரு நாட்டு பிரதமர்கள் - நட்புறவை வலுப்படுத்தும் என நம்பிக்கை
- தமிழ்நாட்டில் உள்ள பீகார் மக்கள் தொடர்பாக தவறான வீடியோவை பரப்பிய பீகார் யூட்யூபர் மணிஷ் காஷ்யப் சரண்
- பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித் பால் சிங் கைது - மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கம்
- சிறுதானிய விவசாயம் நாட்டின் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என பிரதமர் மோடி பேச்சு - சிறுதானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்
- சபரிமலை அருகே புதிய விமான நிலையம் - மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி
உலகம்:
- ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
- கொரோனா பெருந்தொற்று தரவுகளை பகிர்ந்து கொள்வதில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் - சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம்
- இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது - இலங்கை அமைச்சர் டக்ளஸ் பேச்சால் பரபரப்பு
- பிரெட்டி சூறாவளியால் மலாவி நாட்டில் 326 பேர் பலி - 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - 48 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
- இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
- பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் நிது காங்ஹாஸ், பிரீத்தி, மஞ்சு வெற்றி - ரசிகர்கள் மகிழ்ச்சி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion