மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நடந்த, நடக்கவிருக்கும் நிகழ்வுகள்.. இன்றைய காலை தலைப்பு செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
- காவிரியில் தண்ணீர் திறக்க கோரி மத்திய அமைச்சரிடம் அனைத்து கட்சி எம்பிக்கள் மனு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
- தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணியோடு இணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு
- விநாயகர் சிலை விற்பனையை அதிகாரிகள் தடுக்கக்கூடாது; பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதியில்லை - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற தகுதியானவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் - நாளை முதல் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்
- தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- அண்ணாவை பற்றி தவறாக பேசினார் நாக்கு துண்டாகும் - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு எச்சரிக்கை
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார்.
- காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி விஷ்வா போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொலை
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு வேலூர் பகுதியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை
இந்தியா:
- ’இந்தியா’ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து - காங்கிரஸ் அறிவிப்பு
- 'சனாதனம் குறித்து பொதுவெளியில் அமைச்சர் பேசுவது சரியல்ல..' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- பொது நலன் சாராத அரசியல் சாசன விவகாரங்களை மட்டுமே உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாகவும் எளிய மக்களின் வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதில்லை என்றும் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
- மணிப்பூர் கலவரத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் கோக்கர்நாக் பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை விரட்ட ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் மேற்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
- நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது.
- டெல்லியில் 120 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
உலகம்:
- துருக்கியில் அதிபரின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது
- நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோயிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- அமெரிக்காவின் எக்ஸ்.எல். புல்லி வகை நாய்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டு உள்ளதாக தகவல்
- அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன் - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேட்டி
விளையாட்டு:
- ஆசிய கோப்பை 2023 போட்டியில் இன்று இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி: 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
- ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் தீக்சனா பங்கேற்க மாட்டார் - இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
- ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion