மேலும் அறிய

7 AM Headlines: என்னென்ன நடந்தது நேற்று? அறிய வேண்டுமா..? உங்களுக்காக ஏபிபியின் தலைப்பு செய்திகள்!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்; 8.75 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர் - மாணவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து
  • வடமாநில தொழிலாளர்களுக்கு மிரட்டலா? நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு
  • மதுரை ஏர்போர்ட்டில் பயணி தாக்கப்பட்ட சம்பவம்: எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ உட்பட 6 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • தஞ்சாவூரில் கொலை வழக்கில் பிடிக்க சென்றபோது 2 எஸ்.ஐ, ஏட்டுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிகளை சுட்டுபிடித்த காவல்துறை
  • மரக்காணம் அருகே கறிக்காக அரியவகை ஆமை கடத்திச் சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
  • "ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ஒருநாள் லோக் ஆதாலத் நடத்தப்பட வேண்டும்" - முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்
  • தமிழ்நாடு,புதுச்சேரியில் மார்ச் 14, 15, 16 ஆகிய நாள்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • மோடிக்கு பாடம் கற்பிக்கும் தகுதியுள்ள ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா
  • மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்; நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 
  • வெங்கையா நாயுடுவின் அரசியல் வாழ்க்கையில் சிறு களங்கம் என்று சொல்ல எதுவும் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இந்தியா: 

  • பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று கூடுகிறது : ஆன்லைன் சூதாட்ட ரம்மிக்கு தடை குறித்து விவாதிக்க திமுக நோட்டீஸ்
  • வளர்ச்சி பணிகளில் பாஜக கவனம் செலுத்துகிறது, காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
  • பீகார் மாநிலத்தின் முதல் H3N2 நோயாளி தொற்றிலிருந்து குணமடைந்தார். 30 வயதான பெண் மருத்துவ மாணவிக்கு கடந்த வாரம் H3N2 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
  • சந்திரசேகர் ராவுக்கு எதிர்பாராதவிதமாக வயிற்றில் உபாதை ஏற்பட்டதையடுத்து, நேற்று காலை ஏஐஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
  • நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா மற்றும் h3n2 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் வழிக்காட்டுதல் முறை வெளியிடப்பட்டுள்ளது.
  • குஜராத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்த நபரை, அடித்து சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு இடையூறு விளைவிப்பதாக மிரட்டல் விடுத்ததற்காக இரண்டு பேரை அகமதாபாத் குற்றப்பிரிவின் சைபர் செல் கைது செய்தது.

சினிமா - ஆஸ்கர் விருது 

  • சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை Guillermo del Toro’s Pinocchio படம் கைப்பற்றியது. 
  • 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை Everything Everywhere All at Once படத்திற்காக கீ க்யூ குவான் வென்றார்
  • ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை Everything Everywhere All at Once படத்திற்காக  நடிகை ஜேமி லீ கர்டிஸ்  வென்றார்.
  • ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்  சிறந்த ஆவணப்படமாக Navalny  தேர்வு
  • சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது “An Irish Goodbye” .

உலகம்:

  • இத்தாலியில் நடுக்கடலில் தவித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
  • இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கான வாராந்திர பயணிகள் விமான சேவையை அதிகரிக்க ரஷ்யாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
  • அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கியான சிலிக்கான் வேலி வங்கி திவால் -முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

விளையாட்டு:

  • மகளிர் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
  • பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி சதம்  அடித்துள்ளார்.
  • உலக துப்பாக்கி சுடும் போட்டி: பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றார்
  • ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Priyanka Gandhi: வயநாடு இடைத்தேர்தல், வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி - ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்..!
வயநாடு இடைத்தேர்தல்,வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி: ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
TN Rains - Weatherman Update : மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
TN Rains: மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIESICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERSVijay TVK Maanadu | மாநாட்டில் வெடிக்கும் சர்ச்சைகள் மரத்தை வெட்டிய த.வெ.கவினர்?சீறும் சமூக ஆர்வலர்கள்Vijay | விஜய்க்கு நோட்டீஸ்..  மாநாடு நேரத்தில் நெருக்கடி.. மீண்டும் சிக்கலில் த.வெ.க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priyanka Gandhi: வயநாடு இடைத்தேர்தல், வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி - ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்..!
வயநாடு இடைத்தேர்தல்,வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி: ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
TN Rains - Weatherman Update : மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
TN Rains: மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
TN Rain Alert: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - ”டானா” புயல் சென்னை நிலவரம், வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - ”டானா” புயல் சென்னை நிலவரம், வானிலை மையம் எச்சரிக்கை
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
Diwali Celebration: தெரிஞ்சுகோங்க! தீபாவளி ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியா கொண்டாட்றாங்க?
Diwali Celebration: தெரிஞ்சுகோங்க! தீபாவளி ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியா கொண்டாட்றாங்க?
Diwali 2024: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா? இந்த கட்டுப்பாடுகளை முதல்ல படிங்க மக்களே!
Diwali 2024: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா? இந்த கட்டுப்பாடுகளை முதல்ல படிங்க மக்களே!
Embed widget