மேலும் அறிய

Headlines: காலை 7 மணி தலைப்புச் செய்திகள்! உங்களைச் சுற்றி நடந்தது என்னென்ன..?

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது - இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 
  • தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணிகளில் தீவிரம் காட்டிய மாநகராட்சி - பொதுமக்கள் பாராட்டு 
  • புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் - பாதிப்புகளை பார்வையிட்டப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
  • பேரிடர் மேலாண்மை துறை மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் 
  • மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னையில் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்ற விமானங்கள் - பயணிகள் அவதி 
  • 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களை அமைச்சர் சேகர்பாபு கௌரவிக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு 

இந்தியா:

  • குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் மீண்டும் தேர்வு - நாளை நடக்கும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு 
  • ஹிமாச்சலப்பிரதேசத்தில் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு, துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரி தேர்வு - இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது 
  • கேரளாவில் போட்டோஷூட் எடுத்த மணமக்கள் மீது தென்னை மட்டையை வீசிய யானை - வீடியோ இணையத்தில் வைரல் 
  • அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள குடிசைப்பகுதியில் திடீர் தீ விபத்து - 100க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்

உலகம்:

  • இத்தாலியில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரம் - வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி 
  • உக்ரைன் மீது டிரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா - இருளில் மூழ்கிய ஒடேசா நகரம்
  • சீனாவில் புதிதாக 13,811 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் 
  • கடும் பனிப்பொழிவால் பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு - ஓடுதளத்தில் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணி தீவிரம் 

சினிமா 

  • அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா பாடல் ஒரு கோடி பார்வைகளை கடந்து சாதனை 
  • ஆர்யா நடிக்கும் 34வது படத்திற்கு “காதல் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” என டைட்டில் அறிவிப்பு - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது 
  • டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ள அவதார் படத்தின் 2 பாகத்தை காண இந்தியாவில் 4.10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை 
  • சொத்து பிரச்சனையில் பிரபல இந்தி நடிகை வீணா கபூரை அடித்து கொன்ற மகன் - திரையுலகினர் அதிர்ச்சி 

விளையாட்டு:

  • உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி மொரோக்கா அணி அரையிறுதிக்கு தகுதி 
  • உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி 
  • வங்கதேச அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - இஷான் கிஷன் இரட்டை சதம், கோலி சதமடித்து அசத்தல் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget