ஏர்போர்ட்டில் மாறிப்போன லக்கேஜ்.. ஷாக் கொடுத்த இளைஞர்! அடுத்து எல்லாம் சினிமா ரேஞ்ச் தான்!
விமான நிலையத்தில் மாறிப்போன தனது லக்கேஜை திரும்பிப் பெற ஓர் இளைஞர் மேற்கொண்ட முயற்சி சினிமா அளவுக்கு பரபரப்பாக அமைந்துள்ளது.
விமான நிலையத்தில் மாறிப்போன தனது லக்கேஜை திரும்பிப் பெற ஓர் இளைஞர் மேற்கொண்ட முயற்சி சினிமா அளவுக்கு பரபரப்பாக அமைந்துள்ளது. அந்தக் கதையை இளைஞர் நந்தகுமார் ட்விட்டரில் பகிர, இணையவாசிகள் அடேங்கப்பா என்று வாயடைத்துப் போயுள்ளனர்.
நந்தன் குமார் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் தேதி பாட்னாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் பயணித்தார். Indigo 6E-185 என்ற இண்டிகோ விமானத்தில் அவர் சென்றார். பின்னர் பெங்களூருவை அடைந்த அவர் தனது லக்கேஜுக்காகக் காத்திருந்தார். நீண்ட நேரம் கழித்து வந்த லக்கேஜை தூரத்தில் பார்த்துவிட்டே படக்கென்று எடுத்துச் சென்றுள்ளார் நந்தன் குமார். வீட்டுக்குச் சென்றபின்னர் தான் அவருடைய மனைவி இது நமது பை இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன நந்தன் பையை சோதித்துள்ளார். அதில், நம்பர் லாக் செய்யப்பட்டிருந்தது. தனக்கு அந்தப் பழக்கமே இல்லை என்பதை உணர்ந்தே பை மாறியதை நந்தன் உறுதி செய்தார். மேலும் மேலோட்டமாக பார்க்க தனது பை மாதிரியே இருந்த அதில் சில வித்தியாசங்களும் இருந்துள்ளன.
உடனே நந்தன் விமான நிலைய கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் எதிர்ப்பு தரப்பில் எவ்வித பயனுள்ள உதவியும் செய்யப்படவில்லை. பின்னர் ஒருவழியாக கஸ்டமர் கேரில் பேசிய நபரோ பயணியின் விவரங்களைப் பகிர்வது தங்கள் நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிரானது என்று கூறி மறுத்துவிட்டார். உங்களைப் போல் பையை மாற்றி எடுத்துச் சென்ற இன்னொரு நபரும் தொடர்பு கொண்டால் நாங்கள் தெரிவிக்கிறோம் என்று கூறி ஃபோனை வைத்துவிட்டனர். இதனால் நந்தன் சற்று ஏமாற்றமடைந்துள்ளார். அப்போது தான் அவருக்குள் இருந்த அந்த டெவில்ஸ் இன்ஸ்டின்க்ட் வேலை செய்துள்ளது. உடனே, IndiGo6E இணையதளத்திற்குச் சென்று அங்கிருந்து F12 பட்டனை தட்டியுள்ளார். அது டெவலப்பர் கன்சோலை அடையச் செய்ய, இண்டிகோ இணையதள சர்வருக்கு வந்த ரெஸ்பான்ஸ்களை நோண்ட ஆரம்பித்துள்ளார். மற்ற டீபக்கிங் ஆப்ஷன்களையும் ஆராய்ந்துள்ளார். ஒருவழியாக லக்கேஜை மாற்றி எடுத்துச் சென்ற நபரின் பிஎன்ஆர் நம்பரை கண்டுபிடித்தார். பின்னர் அதன் மூலம் கஸ்டமர் தகவலையும் கண்டுபிடித்தார்.
பின்னர் ட்விட்டரில், பகிரங்கமாகவே இண்டிகோ இணையதளத்தில் உள்ள ஓட்டைகளையும் அதைப் பயன்படுத்தி தான் கஸ்டமர் அடையாளத்தைக் கண்டுபிடித்தையும் தெரிவித்தார்.
So, today morning I started digging into the indigo website trying the co passenger’s PNR which was written on the bag tag in hope to get the address or number by trying different methods like check-in, edit booking, update contact, But no luck whatsoever.
— Nandan kumar (@_sirius93_) March 28, 2022
8/n
இது முறை அல்ல என்றாலும் கூட தனது கைப்பையை கண்டுபிடிக்க இந்த நபர் மேற்கொண்ட முயற்சி ஒரு சுவாரஸ்ய படம் போல் அமைந்துவிட்டது எனக் கூறுகின்றனர் ட்விட்டராட்டிகள். Lost Luggage என்று அதற்குப் பெயர் கூட வைக்கலாம் என யோசனை கூறுகின்றனர்.