மேலும் அறிய
Breaking News LIVE: சந்திரபாபுநாயுடு பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
Key Events

பிரேக்கிங் செய்திகள்
Background
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில்' திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது, ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 அன்று இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) திருநெல்வேலி யிலிருந்து ஜனவரி 13 அன்று மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

நின்று செல்லும் இடங்கள்
செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டணம் ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 அன்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
நின்று செல்லும் இடங்கள்
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06057) ஜனவரி 16 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
நின்று செல்லும் இடங்கள்
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ள பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06044) கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17 அன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு கட்டண ரயில் (06043) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18 அன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
நின்று செல்லும் இடங்கள்
இந்த ரயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூண்கள் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.
21:55 PM (IST) • 28 Dec 2022
சந்திரபாபுநாயுடு பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் சந்திரபாபுநாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
17:09 PM (IST) • 28 Dec 2022
Breaking News LIVE: கோவை கார் வெடிப்பு வழக்கு- மேலும் 2 பேர் கைது!
கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் இருவரை கைது செய்துள்ளது என்.ஐ.ஏ.
Load More
Tags :
Today Latest News Latest News Today Today Breaking News Latest News Update Breaking News Updateஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
உலகம்
உலகம்





















