Breaking LIVE: கடந்த வரலாற்றை படிப்பவர்களால்தான் நிகழ்காலத்தில் வரலாற்றைப் படைக்கமுடியும் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டு மக்கள் கையை மாற்றுவது நல்லது - ஜே.பி. நட்டா
நாட்டை இணைக்க நாங்கள் (பாஜக) இருக்கிறோம். நாட்டை பிளக்க அவர்கள் (திமுக) இருக்கிறார்கள். எனது கவலை என்னவென்றால் நாடு பாதுகாப்பான கையில் உள்ளது. ஆனால், தமிழ்நாடு பாதுகாப்பான கையில் இல்லை. ஆகையால், கையை மாற்றுவது நல்லது என, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு 25 எம்.பிக்கள்..! - அண்ணாமலை
2014 மற்றும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து, நாடாளுமன்றத்திற்கு பாஜக எம்.பி.க்களை அனுப்ப முடியவில்லை. ஆனால், இந்த முறை பாஜகவை சேர்ந்த 25-க்கும் அதிகமான எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என, கோவையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு..!
சர்வதேச அளவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.
கடந்த வரலாற்றை படிப்பவர்களால்தான் நிகழ்காலத்தில் வரலாற்றைப் படைக்கமுடியும் - முதலமைச்சர் ஸ்டாலின்
கடந்த வரலாற்றை படிப்பவர்களால்தான் நிகழ்காலத்தில் வரலாற்றைப் படைக்கமுடியும் - முதலமைச்சர் ஸ்டாலின்
மைசூரு- பிரதமரின் சகோதரர் சென்ற கார் விபத்து
பிரதமாரின் சகோதரர் பிரகலாத் மோடி உட்பட 6 பேர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. மைசூருக்கு சென்று கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கி பிரகலாத் மோடி உள்ளிட்டோர் காயமடைந்தனர்.