மேலும் அறிய

Tirumala Tirupati: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு... செக் பண்ணுங்க பக்தர்களே!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது.

Tirumala Tirupati: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. 

திருப்பதி கோயில்:

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

வைகுண்ட ஏகாதசி:

மார்கழி  மாதத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசி திருவிழா  கோலகலமாக நடைபெற உள்ளது.  டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2024 ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெகு விமர்சையாக வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படும்.  இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. டிசம்பர் 23ஆம் தேதி முதல் திறக்கப்படும் சொர்க்கவாசல் ஜனவரி 1 வரை திறந்திருக்கும்.  இதற்கான சொர்க்க வாசல் தரிசன ஏற்பாட்டையும் தேவஸ்தானம்  செய்து வருகிறது. 

தரிசன டிக்கெட்:

நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசன மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலவச தரிசன டிக்கெட் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கு  5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். இந்த இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆதாரை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.  அதேபோல, இன்று முதல் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியானது.  300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம்  டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியானது. 

இதனை தொடர்ந்து தினசரி 2000 ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை 10 நாட்களுக்கு ஏற்ப, அதாவது 20 ஆயிரம் டிக்கெட்டுகளை இன்று மதியம் 3  மணிக்கு தேவஸ்தானம் இணையத்தில் வெளியிட உள்ளது. இதனை பெற்றுக் கொண்ட பக்தர்களும், 300 ரூபாய் டிக்கெட் வாங்கி பக்தர்களுடன் தான் அனுமதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை 5 மணிக்கு 10 நாட்களில் திருமலையில் தங்கும் இடத்திற்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
Embed widget