Tirupati Temple: திருப்பதி தரிசன நேரத்தில் மாற்றம் கொண்டுவந்த தேவஸ்தானம் போர்டு.. நாளை முதல் அமலுக்கு வரும் திருத்தம்..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்திற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்திற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம்.
டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் http:// Tirupati Balaji. AP. gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஏழுமலையான் கோவிலில் தினசரியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இலவச தரிசனம் மட்டுமல்லாது சிறப்பு தரிசனம் கட்டண தரிசனங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.
விஐபிக்கள் பிரேக் தரிசனம் மூலம் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். அப்போது இலவச தரிசன அறைகளில் சில மணி நேரங்கள் பக்தர்கள் காத்திருப்பார்கள்.
அதிகாலை நேரத்தில் துவங்கி காலை எட்டு மணி வரை சுமார் 4000 பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தேவஸ்தானம் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் காலை 8 மணிக்கு தூவங்கி பக்தர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் இலவச தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை மாறி அதிகாலை நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க இயலும். மேலும் தேவஸ்தான அறக்கட்டளைப்படி ரூபாய் 1000 அல்லது 500 செலுத்தி விஐபி பிரேக் தரிசனம் பெறலாம் என்றும், 30 ம்தேதி முதல் திருப்பதியில் உள்ள மாதவம் விருந்தினர் மாளிகை கவுண்டரில் டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்கள் முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும்.