மேலும் அறிய

காஷ்மீரில் டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை! திடீர் தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை!

35 வயதான பிரபல டிக்டாக் புகழ் அம்ரீன் பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லைப்பட்டார்

டிக்டாக் புகழ்

ஜம்மு காஷ்மீரில் 35 வயதான பிரபல டிக்டாக் புகழ் அம்ரீன் பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லைப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் அவரின் 10 வயது மருமகன் ஃபர்ஹான் ஜுபைரும் காயமடைந்தார். 

காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரீன் பட் (35).  கடந்த இரண்டு ஆண்டுகளாக டிக் டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து பிரபலமானவர் இவர். டிக் டாக் தடை செய்யப்பட்ட போதிலும் காஷ்மீர் முழுவதும் மிகவும் அறியப்பட்டு இருந்தார் அம்ரீன்.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவு 7.55 மணியளவில், அம்ரீன் பட் என்ற பெண்மணியின் வீட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். காயமடைந்த அம்ரீன் பட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காவலர் கொலை..

கடந்த செவ்வாய் கிழமை அன்று ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டின் வெளியே காவலர் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தினை தொடந்து அம்ரீன் பட் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. சைபுல்லா காத்ரி என்ற காவலர் தனது 7 வயது மகளை டியூஷனுக்கு அழைத்து சென்ற போது அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மாதத்தில் காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்படும் மூன்றாவது காவலர் சைபுல்லா காத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. 

"ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் பகுதியில் உள்ள கனே மொஹல்லாவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே கான்ஸ்டபிள் காத்ரி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"காத்ரியும் அவரது மகளும் அருகிலுள்ள SKIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அங்கு அவர் காயங்களால் இறந்தார்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். குழந்தையின் வலது கையில் குண்டு காயம் ஏற்பட்டு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது.

இக்கொலை சம்பவங்கள் குறித்து காஷ்மீர் எல்லை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு -  தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு - தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு -  தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு - தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
Breaking News LIVE: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
Nalla Neram Today Sep 21: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 21:சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Embed widget