மேலும் அறிய

அச்சுறுத்தும் கொரோனா.. புதிய விதிமுறைகளை வெளியிட்ட உலக சுகாதார மையம்..

கொரோனா தொற்றுநோய் தற்போது இந்தியாவில் அதிகம் பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பூசி செலுத்தும் விதிமுறைகளை  மறுபரிசீலனை செய்து உலக சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் தற்போது இந்தியாவில் அதிகம் பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பூசி செலுத்தும் விதிமுறைகளை  மறுபரிசீலனை செய்து உலக சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வைரஸ் மாறுபாட்டின் புதிய தொற்று மக்களிடையே அதிக பாதிப்பு ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு தடுப்பூசி தேவைபடவில்லை என்றாலும் இணை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய 6 முதல் 12 மாதத்திற்குள் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

புதிய பரிந்துரைகளின் அடிப்படையில் கொரோனா நோய்தொற்றினால் அதிக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. புதிய வழிகாட்டுதலின்படி மக்களை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர்.

முதல் பிரிவினர்high priority group):  வயதானவர்கள், இணைநோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய பின் 6-12 மாதத்திற்குள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டாம் பிரிவினர் (medium priority group): இணை நோய் இல்லாத இளம் வயதினர், குழந்தைகள், இணை நோய் இருக்கும் 18 வயது மேல் இருப்பவர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் என்றும் இந்த பிரிவினருக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் பிரிவினர்low priority group): 6 வயது முதல் 17 வயது வரை இருப்பவர்கள் மூன்றாம் பிரிவினராக கருதப்படுகின்றனர். இந்த பிரிவினருக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை என்றும் தேவைப்பட்டால் செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி என்பது அனைத்து வயதினருக்கும் உகந்தது என உலக சுகாதார அமைப்பு தரப்பில் கூறப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு இறுதியில் உலக சுகாதார அமைப்பு கொரோனா பாதிப்பு நாட்டில் குறைந்து வருகிறது என தெரிவித்தது. இருப்பினும் தடுப்பூசி போடுவது அவசியம் என வலியுறுத்தியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,151 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11, 903 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்ராவில் 3 பேரும், கேரளாவில் 3 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தினசரி தொற்று பாதிப்பு சதவீதம் என்பது 1.51 சதவீதமாக பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களின் சதவீதம் 98.78% உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,336 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label Curd as Dahi: தமிழ்நாட்டில் தயிருக்கு நஹியா? தாஹியை தயார் படுத்தும் FSSAI: இந்தி திணிப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Embed widget