மேலும் அறிய

RBI Monetary Policy: நாடே எதிர்ப்பார்க்கும் ஆர்.பி.ஐ பணவியல் கொள்கை.. என்ன எதிர்ப்பார்க்கலாம்?

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் இன்று முடிவடையும் நிலையில், பணவியல் கொள்கை அறிக்கையை ஆர்.பி.ஐ ஆளுநர் இன்று தாக்கல் செய்கிறார்.

புதன்கிழமை தொடங்கிய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை காலை) முடிவடைகிறது, மேலும் முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று சமீபத்திய பணவியல் கொள்கை அறிக்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் தாக்கல் செய்கிறார்.

ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட் மற்றும் இதர கொள்கை விகிதங்கள் குறித்த MPCயின் முடிவை அறிவிப்பதைத் தவிர, தற்போதைய உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதார நிலைமை குறித்தும்  சக்திகாந்த் தாஸ் விவரிப்பார்.

அடுத்த MPC கூட்டங்கள் பின்வரும் தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன:

ஜூன் 5-7, 2024

ஆகஸ்ட் 6-8, 2024

அக்டோபர் 7-9, 2024

டிசம்பர் 4-6, 2024

பிப்ரவரி 5-7, 2025

RBI கொள்கை முடிவு: MPC என்ன செய்கிறது? 

நாட்டின் சில்லறை பணவீக்கத்தை இருபுறமும்,  இரண்டு சதவீதம் என்ற அளவில் நான்கு சதவீதத்திற்குள் வைத்திருப்பதே MPCயின் பணியாகும்.  நிதியாண்டில் மத்திய வங்கி தொடர விரும்பும் திசையைப் பற்றி விவாதிக்க ஆண்டுக்கு குறைந்தது நான்கு முறை இந்த குழு கூடுகிறது, வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கும், பணவீக்க இலக்கை பராமரிப்பதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த குழு செயல்படுகிறது. அவர்களின் மதிப்பீட்டைத் தொடர்ந்து, ரெப்போ விகிதத்தை பராமரிப்பதா, உயர்த்துவதா அல்லது குறைப்பதா என்பதை கமிட்டி தீர்மானிக்கிறது.

ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை: என்ன எதிர்பார்க்க வேண்டும்? 

 மாற்றத்திற்கான எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், 2024-25 நிதியாண்டு முழுவதும் ஆறு கொள்கை மறுஆய்வுக் கூட்டங்களிலும் தற்போதைய நிலை தொடரும் என உள்நாட்டு விகித நிர்ணயக் குழு தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சியுடன் பணவீக்கக் கட்டுப்பாட்டை சமநிலைப்படுத்தும், பெஞ்ச்மார்க் ரெப்போ விகிதத்தை 6.5% - மாக தான் இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், சமீபத்திய பொருளாதார தரவு பணவீக்கம் காரணமாக இதில் மாற்றம் ஏற்பட்டு சற்று உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் accommodation withdrawal பற்றிய கொள்கை நிலைப்பாடும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும், இது எதிர்கால விகித மாற்றங்களைக் குறிக்கிறது. இந்த அறிவிப்பு வணிகங்கள் மற்றும் கடன் வாங்குபவர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இது கடன் செலவுகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை நேரடியாக பாதிக்கும்  என கூறப்படுகிறது.

Colliers India இன் மூத்த இயக்குனர் மற்றும் தலைவர் (ஆராய்ச்சி) விமல் நாடார் கூறுகையில், “RBI தனது நிலைப்பாட்டை தொடர்ந்து நான்காவது முறையாக பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 6.5 சதவீதமாக வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2023 இல் நுகர்வோர் விலை பணவீக்கம் 15 மாத உயர்வான 7.44 சதவீதத்தில் இருந்தாலும், உணவுப் பணவீக்கம் உயர்வதற்கான கவலைகள் அதிகமாகவே உள்ளது.

2023-24 நிதியாண்டிற்கான பணவீக்கக் கணிப்பை ரிசர்வ் வங்கி ஏற்கனவே 5.4 சதவீதமாகத் திருத்தியுள்ளது. நிலையான ரெப்போ விகிதங்கள், பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வீட்டுக் கடன், வட்டி விகிதங்களில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும். முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் தங்கள் கனவு வீட்டை வாங்க டெவலப்பர்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து இலாபகரமான ஒப்பந்தங்களைத் தேடும் இந்த காலத்தில் இது மிகவும் முக்கியமானது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget