Aditya L1: ஆரோக்கியமாக இருக்கும் ஆதித்யா எல் 1.. முக்கியத் தகவலை வெளியிட்ட இஸ்ரோ..
சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு இருப்பதாக ஆதித்யா எல்.1 விண்கலம் கண்டறிந்துள்ளது.
ஆதித்யா எல் 1 விண்கலத்தில் இருக்கும் இரண்டாவது கருவி தற்போது செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aditya-L1 Mission:
— ISRO (@isro) December 2, 2023
The Solar Wind Ion Spectrometer (SWIS), the second instrument in the Aditya Solar wind Particle Experiment (ASPEX) payload is operational.
The histogram illustrates the energy variations in proton and alpha particle counts captured by SWIS over 2-days.… pic.twitter.com/I5BRBgeYY5
சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.
அதன்பிறகு, அதில் உள்ள 7 கருவிகள் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளன. இதற்கிடையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டபாதைகள் படிப்படியாக உயரத்தப்பட்டன. செப்டம்பர் 30 ஆம் தேதி பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது.
இதற்கிடையில், அக்டோபர் 30ஆம் தேதி பூமியில் இருந்து அதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. இதனால், பூமியின் ஈர்ப்பு விசை உள்ள பகுதியை விட்டு வெளியேறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வுக்காக லாக்ரோஞ்ச் எல்-1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது.
இப்படி தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் ஆதித்யா எல் 1 கடந்த மாதம் சூரிய கதிர்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி இதனை எடுத்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ தரப்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விண்கலத்தில் உள்ள 7 கருவிகளில் இரண்டாவது கருவி செயல்படத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியில் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் மாறுபாடுகளை ஹிஸ்டொகிராம் விளக்குகிறது. இப்படி சூரியனை நோக்கிய தனது பயணத்தில் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.