Karnataka: திப்பு சுல்தான், சாவர்க்கர் போஸ்டர்கள் வைப்பதில் மோதல்... ஒருவருக்கு கத்திக்குத்து... கர்நாடகாவில் 144 தடை உத்தரவு!
அங்கு வந்த மற்றொரு தரப்பினர், சாவர்க்கர் போஸ்டரை அகற்றிவிட்டு, ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு கொல்லப்பட்ட திப்பு சுல்தான் இடம்பெறும் போஸ்டரை மாற்ற முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று கோலகாலமாக நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகா மாநிலம், ஷிவமொகா மாவட்டத்தில் போஸ்டர் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் முற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாவட்டத்தில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஷிவமோகா மாவட்டத்தில் பாஜகவினரால் போற்றப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் புகைப்படத்துடன் கூடிய பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
திப்பு சுல்தான் Vs சாவர்க்கர்
இந்நிலையில், அங்கு வந்த மற்றொரு தரப்பினர், சாவர்க்கர் போஸ்டரை அகற்றிவிட்டு, ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு கொல்லப்பட்ட திப்பு சுல்தான் இடம்பெறும் போஸ்டரை மாற்ற முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து அந்நபர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.
Shivamogga, Karnataka | Section 144 of the CrPC imposed after a group of Tipu Sultan followers tried to remove banners of VD Savarkar to install Tipu Sultan's banners in the Ameer Ahmad circle of the city. Mild lathi charge used by police. Situation tense: Shivamogga Police
— ANI (@ANI) August 15, 2022
144 தடை
இந்நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இரு தரப்பினரின் போஸ்டர்களைக் கைப்பற்றிய காவல் துறையினர், அவ்விடத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.
இச்சூழலில் ஷிவமொகா பகுதியில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் காவலர்கள் இந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிர விசாரணை
மேலும், பதற்றம் ஏற்பட்டதால் தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்த முயற்சித்ததாகவும், கத்தியால் குத்தப்பட்ட நபர் குறித்தும் காரணம் குறித்தும் தாங்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் திப்பு சுல்தானை போற்றுவது சர்ச்சைக்குரிய செயலாக மாறியுள்ளது.
முந்தைய காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னெடுத்தபோது கூர்க் மாவட்ட உள்ளூர்வாசிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாஜகவினரும், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் கட்சியும் திப்பு சுல்தானை முன்னிறுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்