Crime: 7 ஆண்டு காதல்; வேறு பெண்ணுடன் திருமணம்: தட்டிக்கேட்ட காதலியை முடியை பிடித்து அடித்த காதலனின் உறவினர்கள்!
பெண் ஒருவரை காதலரின் உறவினர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றும் சம்பவம் அன்மை காலங்களில் மிகவும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களை திருமணம் செய்வது கொள்வதாக கூறி மோசடி செய்து வருவது சமீபத்தில் அதிகமாக காணப்படுகிறது. தற்போது அப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது. 7ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த பெண்ணை ஒருவர் ஏமாற்றியுள்ளார். அதில் மேலும் வேதனையான விஷயம் என்னவென்றால் நியாயம் கேட்க சென்ற பெண்ணை நபரின் உறவினர்கள் தாக்கியது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் மெஹ்பூபா நகரைச் சேர்ந்தவர் ரஜினி. இவரும் அதேபகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவரும் 7ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்தச் சூழலில் திடீரென்று கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீநாத்திற்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் கம்மம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதை அறிந்து கொண்டு ரஜினி அந்த திருமண மண்டபத்திற்கு நியாம் கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஸ்ரீநாத்தின் உறவினர்கள் ரஜினி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி அவரை விரட்டியுள்ளனர். மேலும் ரஜினியின் தலை முடியை பிடித்து இழுத்து வந்து வெளியே தள்ளிவிட்டுள்ளனர். அத்துடன் அவரை செருப்பால் அடித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். எனினும் அங்கு வந்த காவல்துறையினர் திருமணத்தை நிறுத்த உதவாமல் இருந்துள்ளனர். மேலும் அங்கிருந்த போலீஸ் தனது செல்போனை நோண்டிக்கொண்டிருந்தார்.
அத்துடன் காவல்துறையினர் முன்னிலையில் ஸ்ரீநாத்தின் உறவினர்கள் ரஜினியை தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த விவகாரத்தில் அந்தப் பெண்ணிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வீடியோவில் பெண்ணை ஸ்ரீனாத்தின் உறவினர்கள் தாக்கும் போது காப்பாற்றாமல் நின்ற காவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க:கிச்சடியில் அதிக உப்பு.... மனைவியை கொலை செய்த கொடூர கணவன்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்