Crime: கிச்சடியில் அதிக உப்பு.... மனைவியை கொலை செய்த கொடூர கணவன்
கிச்சடியில் அதிகமாக உப்பு போட்டதை பொறுத்து கொள்ளாமல் மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன்-மனைவிக்கு இடையே உணவு தொடர்பான சண்டை வருவது வழக்கமான ஒன்று தான். ஆனால் அந்தச் சண்டை சில நேரங்களில் கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பரிமாறிய உணவில் அதிகமாக உப்பு இருந்ததால் மனைவியை கணவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நிலேஷ் காக்(46) என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவரும் இவருடைய மனைவி நிர்மலாவும்(40) ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே சில நாட்களாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காலை உணவாக நிர்மலா கிச்சடியை செய்துள்ளார்.
அந்தக் கிச்சடியில் அவர் அதிகமாக உப்பு போட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நிலேஷ் காக் சற்று கோபம் அடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து இவருக்கும் மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அந்தச் சண்டை முற்றிய நிலையில் நிலேஷ் காக் தன்னுடைய மனைவியை கொலை செய்துள்ளதாக தெரிகிறது. அவர் தன்னுடயை வீட்டில் இருந்த பெரிய துணி ஒன்றை பயன்படுத்தி மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஐபிசி பிரிவு 302ன்படி வழக்குப்பதிவு செய்து இவரை கைது செய்துள்ளனர். கிச்சடியில் உப்பு அதிகமான சம்பவத்திற்கு ஒருவர் தன்னுடைய மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 42 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தச் சம்பவத்தில் மருமகளாக இருந்த அந்தப் பெண் தன்னுடைய மாமானருக்கு சரியான நேரத்தில் காலை உணவு அளிக்கவில்லை என்பதால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. அதாவது அவரை ஆத்திரத்தில் மாமனார் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில வாரங்களில் உணவு பிரச்னை தொடர்பாக கொலை செய்யப்பட்ட இரண்டாவது பெண் நிர்மலா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:நள்ளிரவில் நிர்வாண நடனம்.. வைரலான வீடியோவால் போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்