Tamilnadu RoundUp (29.11.24): தமிழ்நாட்டில் 10 மணி வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள் இதுதான்!
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்

கனமழை எதிரொலியாக இன்று சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் மற்றும் நாளை என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்ததில் 14 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் அச்சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. நகரும் வேகம் மணிக்கும் 9 கி.மீட்டரில் இருந்து 7 கி.மீட்டராக குறைந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.57,280-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.





















