Food Safety Index : மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு விருதுகளை வழங்கிய மத்திய அரசு.. டாப் ரேங்க்கில் தமிழ்நாடு..
உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு விருதுகளை வழங்கியுள்ளார். இந்தப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு விருதுகளை வழங்கியுள்ளார். இதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.
சிறிய மாநிலங்களைப் பொருத்தவரை, கோவா முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் மணிப்பூர், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும், டெல்லி, சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு சூழலைப் போட்டிகரமாகவும், முன்னேற்றும் விதமாக மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டு விருதுகள் முதன்முதலாக வழங்கப்பட்டன. மேலும், உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் கண்ட மாநிலங்களுக்கும் பாராட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
On the #WorldFoodSafetyDay, felicitated the winning State/UTs based on the ranking for the year 2021-22 for their impressive performance across five parameters of food safety.
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) June 7, 2022
Heartiest congratulations to the winners! pic.twitter.com/tsTYFIZDbJ
இதுகுறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, `விருதுகள் பெற்ற மாநிலங்கள் மேலும் கூடுதலாக உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த பணியாற்றுவார்கள் என நம்புகிறேன். தேசமும், ஊட்டச்சத்துகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என நம் பிரதமர் கூறியுள்ளார். ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் அதன் குடிமக்கள் உடல்நலனோடு இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் மத்திய அரசு தற்போது தேசிய சுகாதாரத் திட்டத்தின் மூலமாக மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தி வருவதாகவும், மருத்துவப் பாதுகாப்பை அனைவருக்கும் உறுதி செய்யும் விதமாக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்