Breaking News LIVE Today: இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு
Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வரும் 19ம் தேதி அன்று தமிழக அரசு பொது விடுறையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மாநிலத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 136 நகராட்சிகள் மற்றும் 460 பேரூராட்சிகள் (கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) என மொத்தம் 546 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரண தேர்தலுக்கான (Ordhary Elections) வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு, தேர்தல் நடைபெறவுன்ன அணைத்து நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19-02-2022 அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிக்கை 09.02.2022ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.
ஹிஜாப் வழக்கு விசாரணை திங்கட்கிழமை ஒத்திவைப்பு
கர்நாடக ஹிஜாப் விவகாரத்தின் வழக்கு விசாரணை திங்கட்கிழமை ஒத்திவைக்கப்படுவதாக கர்நாடக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இடைகால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிய நிலையில், விசாரணை ஒத்திவைப்பு
உத்தரபிரதேச முதற்கட்ட தேர்தலில் 48.24% வாக்குபதிவு
உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் மதியம் 3 மணி நிலவரப்படி 48.24% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்
இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு
இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்ட சர்வதேச பயணிகளுக்கு இனி 7 பேர் தனிமைப்படுத்துதல் இல்லை. இந்த கட்டுப்பாடுகள் வரும் 14ஆம் தேதி அமலுக்கு வருகின்றது.
Breaking News LIVE: உத்தரப்பிரதேச தேர்தல் - 2 மணி நேரத்தில் 7.9 % வாக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் காலை 9 மணி வரை 7.9% வாக்குகள் பதிவாகியுள்ளது.
Breaking News LIVE: இந்தியாவில் ஒருநாள் கொரோனா 67,084 ஆகக்குறைந்தது
இந்தியாவின் ஒரேநாளில் 67,084 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 1,67,882 பேர் குணமான நிலையில் 1,241 பேர் உயிரிழந்துள்ளனர்.